India
விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. கணவரின் சகோதரனே செய்த அவலம்.. உ.பி.-யில் கொடுமை !
முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யப்பட்ட மனைவியை, கணவரும் அவரது சகோதரரும் பல முறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொடுமை படுத்தியுள்ள சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சல்மான் என்ற நபரை திருமணம் செய்துள்ளார். இவர்கள் திருமண வாழ்க்கை சீராக இல்லாத நிலையில், மனைவியுடன் வாழ பிடிக்காத கணவன், அவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளார்.
அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவியை சல்மான் 'முத்தலாக்' மூலம் விவாகரத்து செய்துள்ளார். இருப்பினும் தனது கணவருடன் வாழ மனைவி விருப்பம் தெரிவித்ததால், கணவர் மனைவியிடம் ஒப்பந்தம் ஒன்று செய்துள்ளார்.
அதாவது தனது மனைவி தனது தம்பியை திருமணம் செய்து, விவாகரத்து செய்தால், தனது மனைவியை தான் ஏற்றுக்கொள்வதாக கூறினார். இதற்கு சல்மானின் குடும்பத்தாரும், இஸ்லாமிய மதகுரு குட்டு ஹாஜி என்பவரும் உடந்தையாக இருந்துள்ளனர். எனவே அந்த பெண்ணும் தனது கணவரின் சகோதரனை திருமணம் செய்துள்ளார்.
ஆனால் அவரோ இவருக்கு விவாகரத்து கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் ஊருக்கே வீட்டில் அனைவரும் இருந்ததால், கணவரும், அவரது தம்பியும் மாறி மாரி அந்த பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த கொடுமைகளை தாங்க முடியாது அந்த பெண், இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், சல்மான், அவரது சகோதரர் இஸ்லாம் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தாக குறிப்பிட்டுள்ளார் அந்த பெண். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் மீது அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்று, மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு வாக்குமூலம் வாங்கப்பட்டது.
தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட 6 பேரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் காவல்துறையினர் மேற்கொண்டுவ வருகின்றனர். முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யப்பட்ட மனைவியை, கணவரும் அவரது சகோதரரும் பல முறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொடுமை படுத்தியுள்ள சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!