India
விவசாய தோட்டத்தில் இருந்த ரூ.500 நோட்டுகள்.. போலிஸாருக்கு பறந்த தகவல்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி !
கேரளாவின் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி மேலக்கம் பகுதியில் உள்ள தொடரில் சில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அந்த தொழிலாளர்கள் வழக்கம்போல நேற்று பணிக்கு சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள பூசணிக்காய் தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச சென்றபோது அதிர்ச்சி சம்பவம் ஒரு காத்திருந்துளது.
அங்குள்ள தொட்டி அருகே ஏராளமான 500 ரூபாய் நோட்டுகள் சிதறியும் தண்ணீரில் மிதந்தபடியும் இருந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக தோட்ட பணியாளர்கள் காவல்நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்படி போலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வைத்துள்ளனர்.
போலிஸார் அந்த நோட்டுகளை எடுத்து பார்த்தபோது அதில் சில நோட்டுகள் பாதி எரிந்த நிலையில் இருந்துள்ளது. மேலும், அந்த நோட்டுகள் கள்ளநோட்டுகள் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அந்த கள்ளநோட்டுக்களை எடுத்து அதனை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் கள்ள நோட்டுகளை அங்கு வீசியது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், போலிஸில் மாட்டக்கூடாது என இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என்ற ரீதியிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சினிமா படப்பிடிப்புக்காக அடிக்கப்பட்ட கள்ளநோட்டுகள் ஒரு ஆற்றில் மிதந்துவந்து பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!