India
ரௌடிகளை பதம் பார்த்த கொசுக்கள்.. பாட்டிலுடன் நீதிமன்றத்தில் கெஞ்சிய பிரபல ரெளடி :மும்பையில் நடந்தது என்ன?
பிரபல சிறை கைதியான இஜாஸ் லக்டவாலா மும்பை நீதிமன்றத்திற்கு பாட்டிலுக்குள் கொசுவை அடைத்து கொண்டு வந்துள்ள நிகழ்வு அனைவர் மத்தியிலும் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் பிரபல ரெளடியாக வலம் வந்தவர் தாவூத் இப்ராகிம். பல முக்கிய குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள இவர் மும்பையிலேயே மாபெரும் கேங்ஸ்டராக இருக்கிறார். இவரது கூட்டாளியான இஜாஸ் லக்டவாலா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தனக்கு ஜாமீன் வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கை மனுவும் நீதிமன்றத்தால் அதிக முறை நிராகரிக்கப்பட்டது. எனவே இவர் தற்போது வரை முழு நேரமும் சிறையிலேயே உள்ளார். சிறைக்கைதிகளுக்கு எந்த நடைமுறையோ அதுவே இவருக்கும் அளிக்கப்படுவதால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளார்.
இந்த நிலையில் இவரடைக்கப்பட்டுள்ள தலோஜா சிறையில் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கொசு வலை பயன்படுத்த எண்ணிய இவர், அதற்காக மாவட்ட செஷ்ன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "தான் இருக்கும் தலோஜா சிறையில் கொசு தொல்லை அதிகமாக இருப்பதால் தன்னால் தூங்க இயலவில்லை.
இங்குள்ள மற்ற கைதிகளும் இந்த கொசு தொல்லையால் மிகுந்த அவதிப்படுகின்றனர். இந்த கொசு கடியால் பல்வேறு நோய்களும் எங்களுக்கு வருகிறது. எனவே கொசு வலை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த மனுவை மீதான விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இஜாஸ் தான் முன்னதாக அடைக்கப்பட்ட சிறையில் கொசுவலை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் தற்போது இருக்கும் சிரியாவில் கொசு அதகியாமாக காணப்படுவதாக கூறி, அதனை நிரூபிக்கும் வகையில் ஒரு பாட்டிலுக்குள் கொசுவை பிடித்து கொண்டு வந்து நீதிமன்றத்தில் காட்டினார்.
இஜாஸ்ஸின் செயலை கண்ட அங்கிருந்த வழக்கறிஞர்கள் நீதிபதி வியந்து பார்த்தனர். மேலும் கொசுவை பிடித்து கொண்டு வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து இவரது கோரிக்கை குறித்து காவல்துறையிடம் கேட்டபோது, அவர்கள் இஜாஸ்ஸின் பாதுகாப்பின் காரணமாக கொசு வலை பயன்படுத்த அனுமதி கொடுக்க கூடாது என்று வலியுறுத்தினர்.
பின்னர் காவல்துறையினரின் வாதத்தை கேட்ட நீதிபதி இஜாஸ்ஸுக்கு கொசு வலை பயன்படுத்த அனுமதி மறுத்து உத்தரவிட்டார். மேலும் இவரை போல் பல கைதிகளும் கொசுத்தொல்லை இருப்பதாக கூறி கொசு வலை கேட்டு விண்ணப்பத்தால், சிறையில் கொசு தொல்லையை கட்டுப்படுத்த சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி வலைக்கு பதிலாக கொசுவர்த்தியோ, கிரீமோ பயன்படுத்தலாம் என்றும் உத்தரவிட்டார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?