India
நாடகம் நடத்துவோர் மத்தியில் நிஜ ஹீரோ.. மோர்பி ஆற்றில் தத்தளித்த 50 பேரின் உயிரை காப்பாற்றிய இளைஞர்!
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே தொங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த பாலம் 100 ஆண்டுகளுக்குப் பழமையானது. இந்த பாலம் பழுதடைந்ததால் சில மாதங்களுக்கு முன்பு மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் குஜராத் மாநிலத்தின் புத்தாண்டு தினமான கடந்த 26ம் தேதி திறக்கப்பட்டது.
இதையடுத்து அக்டோபர் 31ம் தேதி இரவு இந்த பாலத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என குடும்பத்துடன் 500க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் பாலத்தில் இருந்துள்ளனர். அப்போது திடீரென பாலம் இரண்டாக அறுந்து ஆற்றில் விழுந்துள்ளது. இதில்141 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துயர விபத்திற்கு எதிர்க்கட்சிகள் பலரும் ஆளும் பா.ஜ.க அரசைக் கடுமையாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாகக் குஜராத் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கு முன்னதாக இந்த பாலத்தைத் திறக்க வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாகத் திறத்தால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. மேலும் இதுதான் குஜராத் மாடலின் லட்சணம் எனவும் விமர்சித்து வருகின்றனர்.
மேலும் இந்த விபத்திற்குக் காரணமாக இருந்த ஒரேவா நிறுவனத்தின் உரிமையாளர் பெயர், நகராட்சி அதிகாரிகளின் பெயர் ஏன் FIR-ல் இடம் பெறவில்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உட்படப் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல் இந்த ஒரோவா நிறுவனம் தொங்கு பாலத்ததை எந்தவிதமான புனரமைப்பு பணிகளையும் செய்யாமல் வெறும் பெய்ண்ட் மட்டுமே அடித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது.
அதேபோல், தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தின் போது மோர்பி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவுமான காந்திலால் அம்ருதிதா மக்களின் உயிரைக் காப்பாற்றுவதாக மச்சு ஆற்றில் நீச்சல் அடித்து நாடகமாடிய வீடியோ வைரலாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி நாடகமாடிய பா.ஜ.க கட்சியை சேர்ந்தவர்களுக்கு மத்தியில் நிஜ ஹீரோவாக ஆற்றில் தத்தளித்த 50க்கும் மேற்பட்டோரின் உயிரை இஸ்லாமிய இளைஞர் ஹூசைன் பதான் காப்பாற்றியுள்ளார். நீச்சல் வீரான இவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் ஆற்றில் குதித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு கரைக்குக் கொண்டு வந்து சேர்ந்துள்ளார். இப்படி 50க்கும் மேற்பட்ட உயிர்களை இவர் காப்பாற்றியுள்ளார்.
அதேபோல் தபுபீக் பாய் என்பவரும் 30க்கும் மேற்பட்டவர்களை காப்பாற்றி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளார். "இதுபோன்ற துயரமான நேரங்களில் நமக்குத் தேவை சாதி-மதம் அல்ல. மனிதாபிமானம்தான்” என்று கூறியுள்ளார். குஜராத்தில் துயர சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடி வரும் பா.ஜ.கவினர் மத்தியில் மனிதநேயத்திற்கு எடுத்துக்காட்டாகியுள்ள தபுபீக் பாய், ஹூசைன் பதான் ஆகியாரை பொதுமக்கள் சமூகவலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?