India

கர்நாடகாவை உலுக்கிய HoneyTrap.. Record செய்யப்பட்ட ஆபாச வீடியோ! இளம் பெண்ணிடம் ஏமாந்த மடாதிபதி தற்கொலை!

கர்நாடகா மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் பழமையான காஞ்சுக்கல் மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக பசவலிங்க சுவாமிகள் (வயது 45) இருந்து வந்தார். இவர் கடந்த 1997-ம் ஆண்டு முதல் இந்த மடத்தின் மடாதிபதியாக இருந்து வருகிறார். இதனால் இவருக்கு அந்த பகுதியில் நல்ல செல்வாக்கு இருந்துள்ளது.

இவர் கடந்த தீபாவளி தினத்தன்று எப்போதும் வெளியே வரும் நேரத்தில் வெளிவராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவரின் சிஷ்யர்கள் அவரின் அறைக்கு சென்றுபார்த்தபோது ஜன்னலில் உள்ள கிரீல் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் சிஷ்யர்கள் காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலிஸார் மடாதிபதியின் அறையில் சோதனை நடத்தியபோது அங்கு ஒரு கடிதம் இருந்துள்ளது. அந்த கடிதத்தில் மடத்தின் மடாதிபதி பொறுப்பில் இருந்து சிலர் என்னை விலக்க நினைக்கிறார். இதற்காக எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான செய்திகளை பரப்ப நினைக்கின்றனர். இதுதொடர்பாக என்னை மிரட்டியதால் நான் தற்கொலை செய்து கொள்வதாக கூறியிருந்தார். இந்த சம்பவம் கர்நாடகாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக போலிஸார் நடத்திய விசாரணையில் 22 வயதான நீலாம்பிகா என்னும் கல்லூரி மாணவி ஒருவர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில், கண்ணூர் மடாதிபதியின் தூண்டுதலில்படி பசவலிங்க சுவாமிகளிடம் அந்த மாணவி நெருக்கமாகியுள்ளார். பின்னர் அடிக்கடி செல்போனில் இருவரும் பேசிய நிலையில், தொடர்ந்து வீடியோ கால் மூலமாகவும் பேசியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இருவரும் நிர்வாணமாக வீடியோ கால் மூலம் பேசிவந்த நிலையில் அதனை அந்த பெண் ஸ்கீரின் ரெக்கார்ட் மூலம் பதிவு செய்து வைத்துள்ளார். இவ்வாறு 4 வீடியோக்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதனை வைத்து பசவலிங்க சுவாமிகளை இவர்கள் மிரட்டி வந்துள்ளனர். இதனால் அஞ்சிய மடாதிபதி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஹனிடிராப் என்று அழைக்கப்படும் இதேபோன்று செயலால் ஒடிசாவில் பாஜக தலைவர்கள் ஒரு பெண்ணிடம் சிக்கிய நிலையில், தற்போது கர்நாடகாவில் ஹனிடிராப்பில் சிக்கி மடாதிபதி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: மழைநீர் தேங்காத சென்னை.. தமிழக அரசின் நடவடிக்கைக்கு TIMES OF INDIA, THE HINDU நாளேடுகள் பாராட்டு !