India
தொடர்ந்து சரியும் ரூபாய் மதிப்பு.. 2 ஆண்டுகளாக இல்லாத அளவு குறைந்த அந்நிய செலாவணி கையிருப்பு !
இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டில் வர்த்தம், தொழில் வளர்ச்சி, முதலீடுகள், வேலைவாய்ப்புகள் என அனைத்துத் துறைகளும் முற்றிலும் சிதைந்து போயுள்ளன.
குறிப்பாக, தொடர்ந்து அடிவாங்கும் பங்குச் சந்தைகள், ஜி.டி.பி வீழ்ச்சி காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் மிகக் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சரிந்து வந்த டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சமீபத்தில் வரலாற்றில் முதல் முறையாக 83ஐ தாண்டியது.
இந்தாண்டு மட்டும் ரூபாய் மதிப்பு 10 - 12 சதவீதம் சரிந்துள்ளது. இதன் காரணமாக இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு இந்திய அரசு அதிக அளவு அந்நிய செலாவணியை கொடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதேவேளையில் அன்னிய செலாவணி கையிருப்பு வேகமாகச் சரிந்துள்ளது. மேலும், ரூபாய் மதிப்பு சரிவதை தடுக்க ரிசர்வ் வங்கி தன்னிடம் இருந்த டாலர்களை விற்பனை செய்தது.
ரிசர்வ் வங்கி அக்டோபர் 28 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், அந்நிய செலாவணி கையிருப்பு அக்டோபர் 21 ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 3.85 பில்லியன் டாலர் குறைந்து 524.52 பில்லியன் டாலராக உள்ளது என தெரிவித்துள்ளது. இது பொருளாதார விமர்சகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பின் சரிவைச் சமாளிக்க ரிசர்வ் வங்கி இதுவரை சுமார் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான அன்னிய செலாவணியைச் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் ரூபாய் மதிப்பு குறைவதை தடுக்க இயலவில்லை. மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணமாகவே இந்தியா இது போன்ற பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
கோவையில் ரூ.158.32 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வட்டி கொடுக்க முடியாமல் தவிப்பு... பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெற்றோர் - பீகாரில் அதிர்ச்சி !
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !