India
‘1 வாங்கினால் மற்றொன்று இலவசம்..’ சாப்பாட்டுக்காக 8 லட்சத்தை இழந்த பெண்: Facebook விளம்பரத்தால் பரிதாபம்!
முகநூல் பக்கத்தில் வந்த போலி விளம்பரத்தை நம்பிய பெண் ஒருவர், சாப்பாட்டை ஆர்டர் செய்தபோது, அவரது மொபைல் ஹேக் செய்யப்பட்டு 8 லட்சம் திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அடுத்த பாந்த்ரா என்ற பகுதியைச் சேர்ந்த 54 வயது பெண் ஒருவர் முகநூல் பக்கத்தில் உலாவி வந்துள்ளார். அப்படி ஒருமுறை அவர் முகநூல் பக்கத்தை பார்த்துக்கொண்டிருக்கையில் உணவு தொடர்பான விளம்பரம் ஒன்று வந்ததுள்ளது. அதில் 'மகாராஜா போக் தாலி' என்று சொல்லப்படும் உணவு ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் என்றும், அதன் விலை ரூ.200 என்றும் வந்துள்ளது.
இதனை கண்ட அந்த பெண், தனது ஆசையை கட்டுப்படுத்தாமல் உடனே ஆர்டர் கொடுத்துள்ளார். அப்போது ஆன்லைன் மூலம் ரூ.200 செலுத்த முற்பட்டு, அவரது வங்கி விவரங்களை குறிப்பிட்டுள்ளார். சிறிது நேரத்திலேயே ஒரு எண்ணிலிருந்து அவருக்கு அழைப்பு வந்திருக்கிறது. அதில், புதிதாக ஒரு லிங்க் அனுப்பியுள்ளதாகவும், அதனை உடனே கிளிக் செய்யும்படியும் கூறியுள்ளார்.
மோசடி விழிப்புணர்வு இல்லாத இந்த பெண்ணும், அவர்கள் சொன்ன லிங்கை கிளிக் செய்துள்ளார். பின்னர் அவரது வங்கி கணக்கில் இருந்த 8.46 லட்ச ரூபாய் எடுக்கப்பட்டது. இதையறிந்து அதிர்ந்த அந்த பெண், உடனடியாக இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், "போதிய விழிப்புணர்வு இல்லாத இந்த பெண் முகநூல் மூலம் ஒளிபரப்பான உணவு விளம்பரத்தை நம்பிய இந்த பெண், அவர்கள் கூறியவற்றையெல்லாம் செய்துள்ளார். அப்போது லிங்கை கிளிக் செய்ய சொல்லி அதன் மூலம் தனது போனில் ரிமோட் அக்சஸ் செயலியை தரவிறக்கம் செய்துள்ளார். இதன் மூலம் போனுக்கு வரும் ஓ.டி.பி.,யை கண்ட்ரோலில் எடுத்த மோசடி நபர், 27 பரிவர்த்தனைகள் மூலம் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை திருடியுள்ளனர்" என்று கூறினார்.
மகாராஷ்டிராவில் ரொட்டி உள்பட பல்வேறு உணவுகள் அடங்கிய பிரபலமான 'மகாராஜா போக் தாலி' உணவு வழக்கமாக ரூ.1,500க்கு விற்கப்பட்டு வரும் நிலையில், ரூ.200-க்கு 'ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம்' என்ற விளம்பரத்தை நம்பி ரூ.8 லட்சத்தை இழந்த பெண்ணின் நிலைமை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!