India
32 ஏக்கர் நிலத்தை குரங்குகளுக்கு எழுதிக் கொடுத்த ஆச்சரிய கிராமம்.. இந்தியாவில் எங்கு உள்ளது இந்த கிராமம்?
உலகம் முழுவதும் நிலத்திற்காக குடும்பத்திற்குள் கொலை நடக்கும் இந்த காலத்தில் குரங்குகளுக்கு ஒரு கிராமம் 32 ஏக்கர் நிலத்தை சொந்தமாக எழுதி வைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் உஸ்மனாபாத் மாவட்டத்தில் உள்ளது உப்லா என்ற கிராமம். இந்த கிராமத்தில் அதிகமான குரங்குகள் உள்ளது. இதனால் கிராம மக்கள் வீட்டிற்கு வரும் குரங்குகளை விரட்டி அடிக்காமல் அதற்குப் பழம் போன்ற உணவுகளைக் கொடுத்து தங்கள் குடும்பத்தில் ஒருவரைபோல் பழகி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கிராம மக்கள் ஒன்று சேர்ந்து குரங்குகளுக்கு என்று கிராமத்தில் 32 ஏக்கர் நிலத்தை எழுதிக் கொடுத்துள்ளனர். இதற்கான ஆவணம் இந்த கிராமத்தில் உள்ளது. ஆனால் குரங்கிற்கு எப்போது இந்த நிலம் எழுதிக் கொடுக்கப்பட்டது என்று எந்த ஆவணங்களும் இல்லை.இருந்தாலும், அக்கிராம மக்கள் அந்த நிலத்தைக் குரங்குகள் பயன்படுத்தவே அனுமதித்து வருகின்றனர்.
இது குறித்துப் பேசிய அக்கிராம பஞ்சாயத்துத் தலைவர் பாப்பா பாட்வால், "32 ஏக்கர் நிலமும் குரங்குகளுக்குத்தான் சொந்தம் என்று ஆவணங்கள் தெளிவாகக் கூறுகின்றது. ஆனால் இது எப்போது செய்யப்பட்டது என்றுதான் தெரியவில்லை.
தற்போது கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குரங்குகள் இருக்கின்றது. விலங்குகள் ஒரே இடத்தில் இருக்காது என்பதால் சில குரங்குகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. முன்பு எல்லாம் கிராமத்தில் திருமணம் நடக்கும்போது எல்லாம் குரங்குகளுக்குப் பரிசு வழங்குவார்கள் அதன்பிறகுதான் விழாவே தொடங்கும். ஆனால் இந்த நடைமுறை தற்போது அனைவரும் பின்பற்றுவதில்லை" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!
-
நாகூர் சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள்! : நேரில் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!