India
ஒன்றிய அமைச்சர் விட்ட சவால்.. 32 கிலோ எடை குறைத்த பாஜக MP.. "2,300 கோடி கொடுத்தாராம்.. அவரே சொன்ன தகவல்!"
பிரதமர் நரேந்திர மோடி மக்கள் தங்கள் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்த 'ஃபிட் இந்தியா' என்ற இயக்கத்தை கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கினார். இதுகுறித்து அவ்வப்போது ஒன்றிய அமைச்சர்கள் மேடையில் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவர். அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள உஜ்ஜைனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உஜ்ஜைன் எம்.பி அனில் ஃபிரோஜியா கலந்து கொண்டார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், உஜ்ஜைன் எம்.பி அனில் ஃபிரோஜியா தனது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், அவர் எடை அதிகமாக இருப்பதால் எடை குறைக்க வேண்டும் என்றும், அப்படி குறைக்கும் ஒவ்வொரு எடைக்கும் 1000 கோடி நிதி ஒதுக்கப்படுவதாகவும் அறிவித்தார்.
அப்போது வேடிக்கையாக ஒன்றிய அமைச்சர் சொன்னதை சவாலாக உஜ்ஜைன் எம்.பி அனில் ஏற்றுக்கொண்டுள்ளார். அப்போது பேசிய அவரது பேச்சை சவாலாக நினைத்து எடை குறைக்க துவங்கியுள்ளார். அதன்படி கடந்த ஜூன் மாதம் வரை 15 கிலோ எடையை அனில் குறைத்துள்ளார்.
பின்னர் உறுதியளித்தபடி நிதியை விடுவிக்குமாறு கேட்டபோது, எடை குறைப்பு உஜ்ஜயினிக்கு பட்ஜெட் ஒதுக்கினால், தொகுதியின் வளர்ச்சிக்காக மேலும் எடையைக் குறைக்க தயாராக இருப்பதாகவும் அனில் கூறினார். அவர் கூறிய படியே தொடர்ந்து தற்போது 32 கிலோ வரை குறைத்துள்ளார்.
இது குறித்து உஜ்ஜைன் எம்.பி அனில் ஃபிரோஜியா கூறுகையில், "ஒன்றிய அமைச்சர், நா எடை குறைத்தால், எனது தொகுதிக்கு நிதி ஒதுக்கப்படும் என்றார். நானும் அதற்காக கடுமையாக முயன்றுள்ளேன். தினமும் டயட் அட்டவணையை பின்பற்றுகிறேன்.
அதில் முதல் ரூல், காலை 5.30 மணிக்கு எழுந்து எழுந்து நடைப்பயிற்சிக்கு செல்வது. அதையும் செய்து, உடற்பயிற்சியில் ஓட்டம், உடற்பயிற்சி மற்றும் யோகா ஆகியவற்றையும் செய்கிறேன். அதோடு ஆயுர்வேத உணவு அட்டவணையைப் பின்பற்றுகிறேன்.
அதன்படி காலை உணவை அளவாகவும், மதிய உணவு மற்றும் இரவு உணவாக ஒரு கிண்ணம் பச்சை காய்கறிகள் மற்றும் ஒரு ரொட்டி கலந்த தானியங்களையும் சாப்பிடுகிறேன். அதுமட்டுமின்றி அவ்வப்போது காய்கறி சூப்களை குடிக்கிறேன்" என்றார். முன்னதாக 135 கிலோவாக இருந்த அவர் இந்த சவாலில் எடை குறைந்து 93 கிலோவாக உள்ளார்.
இந்த நிகழ்வு குறித்து பாஜக எம்.பி., அனில் கூறுகையில், "ஒன்றிய அமைச்சர் கூறியது போல் தற்போது 32 கிலோ வரை எடை குறைத்துள்ளேன். இதை அவரிடம் கூறினேன். அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்ததோடு, எங்கள் தொகுதிக்கு தற்போது 2,300 கோடி நிதி ஒதுக்கி வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்" என்றார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!