India
இரகசிய காதலால் கணவருக்கு விஷ ஊசி செலுத்திய இரண்டாவது மனைவி.. மகன் கொடுத்த புகாரால் வெளிவந்த உண்மை !
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் பகுதியைச் சேர்ந்தவர் கேசவரா தேஷ்முக். இவர் அந்த பகுதியில் தனது மனைவி சுகாசினி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். மருத்துவராக பணிபுரிந்து வரும் சுகாசினி மீது அவரது கணவருக்கு சந்தேகம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் சம்பவத்தன்று கணவர் கேசவரா தேஷ்முக், மனைவியை காண அவரது மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது மனைவியின் ஆண் நண்பரான அருண் காண்டேகர் என்பவர் அவருடன் சிரித்து சிறிது பேசிக்கொண்டிருந்தார். இதனை கண்ட கணவர் அங்கே வைத்து இருவரிடமும் தகராறு செய்துள்ளார். இதனால் மூன்று பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் தன் கணவருடன் தனியே பேச வேண்டும் என்று கழிவறை அருகே கூட்டி சென்ற மனைவி, கணவருடன் பேசிக்கொண்டிருக்கையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இதற்கு மேல் தனது கணவரை சமாளிக்க முடியாது என்று எண்ணிய சுகாசினி, தனது ஆண் நண்பர் அருணுடன் சேர்ந்து கணவருக்கு விஷ ஊசி செலுத்தியுள்ளார்.
இதில் கோமா நிலைக்கு போன கணவரை அதே முறுத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்துள்ளார். இந்த நிலையில் சுமார் 33 நாட்களாக கோமா நிலையில் இருந்த கணவர் சிகிச்சையா பலனின்றி உயிரிழந்தார். தந்தை இறந்த சோகத்தை தாங்க முடியாத மகன், தனது தாயிடம் சண்டையிட்டுள்ளார். மேலும் தனது தந்தையின் இறப்புக்கு காரணம் தாய் என்றும் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தாய் சுஹாசினி மற்றும் அவரது ஆண் நண்பர் அருண் ஆகியோர் தலைமறைவாகியுள்ளார். தற்போது அவர்கள் இருவரையும் காவல்துறை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவர் தேஷ்முக், தனது முதல் மனைவியை விடுத்து இரண்டாவதாக சுஹாசினியை திருமணம் செய்துகொண்டார். இது குறித்து தேஷ்முக்கின் முதல் மனைவி அளித்த புகாரின் பேரில் 6 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துள்ளார் தேஷ்முக் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்