India
பிட்புல் நாய் கடித்து 2 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி.. பெண்ணுக்கு 50 தையல்கள் -அரியானாவில் அதிர்ச்சி
பிட்புல் நாய் - நாய் வகைகளிலே மிகவும் ஆபத்தான விலங்காகும். முன் காலத்தில் பிட்புல் நாயை வேட்டையாட பயன்படுத்த பட்டதால், இதன் குணம் மிகவும் கொடூரமாக இருக்கும். எனவே இந்த வகை நாயை இங்கிலாந்து உள்ளிட்ட 5 நாடுகளில் வளர்க்க தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் பிட்புல் நாய் வளர்க்க தடையில்லை என்பதால் பல்வேறு மாநிலங்களில் இந்த நாய்களை வீட்டில் வளர்த்து வருகின்றனர்.
கடந்த ஜூலை மாதம் உத்தரபிரதேச மாநிலம் லக்னோ பகுதியில் மகன் வளர்த்த பிட்புல் நாய், வீட்டில் யாருமில்லாத நேரத்தில் வயதான தாயை கடித்து கொன்றுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த நாயை மகன் லக்னோ மாநகராட்சியில் ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து அதே மாதத்தில் பஞ்சாபில் பிட்புல் ரக நாய் ஒன்று சுமார் 10 வயது மதிக்கத்தக்க சிறுவனின் காதலி கடித்து துப்பியுள்ளது. இதுவும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் கடந்த மாதம் இதே உத்தரபிரசேதத்தில் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை, பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை உரிமையாளர் வைத்திருந்த பிட்புல் நாய் ஒன்று கொடூரமாக கடித்ததில் சிறுவனுக்குக் 150 தையல்கள் போடபட்டுள்ளது. அதோடு இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதோடு மீண்டும் உத்தரபிரதேச மாநிலதிலுள்ள கான்பூரில் பசுவின் தாடையை பிட்புல் நாய் ஒன்று கடித்துள்ளது. இதைக் கண்ட பிட்புல் நாயின் உரிமையாளர் உள்ளிட்டோர் பசுவை காப்பாற்ற முயன்றனர். மேலும் அங்கிருந்த 3 பேர் கட்டை உள்ளிட்ட பொருள்களால் நாயை தாக்கியும், நாயை இழுக்க பார்த்த நிலையிலும் கூட அந்த பிட்புல் நாய் தனது பிடியை விடவில்லை. பின்னர் இறுதியாக பிட்புல் நாய் தனது பிடியை விடுத்துள்ளது. இதனை மேல் மாடியில் இருந்து வீடியோ எடுத்த சிலர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ பெரும் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கான்பூர் பகுதியில் பிட்புல் நாய் வளர்க்க தடை விதித்து கான்பூர் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதோடு பிட்புல் நாய் மட்டுமல்ல ராட்வீலர் நாய் இனங்களையும் தடை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அந்த பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது ஒரு பெண்ணை, பிட்புல் வகை நாய் கடித்து குதறியுள்ளது.
அதாவது அரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் வசித்து வருபவர் சூரஜ். தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் இவர், வீட்டில் ஒரு பிட்புல் நாயையும் வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை அனைவரும் வெளியே சென்று மாலை வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது கதவை திறந்ததும், அந்த நாய் மனைவி மற்றும் குழந்தைகள் மீது பாய்ந்து கடிக்க தொடங்கியுள்ளது. பின்னர் குச்சியை எடுத்து நாயை சூரஜ் அடக்க முயன்ற போதும், நாய் அடங்காமல் குடும்பத்தாரை தாக்கியுள்ளது. இந்த கொடூர தாக்குதலில் மனைவிக்கு முகம்,கை, கால் என படுகாயம் ஏற்பட்டு 50 தையல்கள் போடப்பட்டது.
மேலும் 2 குழந்தைகளும் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!