India
ஒடிசாவை தொடர்ந்து கேரளாவிலும் ஒரு HONEY TRAP.. இளம்பெண்ணின் அந்தரங்க வலையில் சிக்கிய 71 வயது முதியவர் !
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அர்ச்சனா என்ற இளம்பெண், சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அரசியல்வாதி, தயாரிப்பாளர் என பணம்படைத்தவர்களை குறி வைத்து தனது அந்தரங்க வலையில் சிக்க வைத்துள்ளார். மேலும் அதனை தனது காதலன் உதவியோடு வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர்.
இதையடுத்து இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டதில் அர்ச்சனா சிக்கியுள்ளார். தற்போது இது போன்ற HONEY TRAP கேரளாவிலும் அரங்கேறியுள்ளது.
கேரளாவை சேர்ந்தவர் ராஜி என்ற இளம்பெண். இவருக்கு ஆண் நண்பர்கள் மூலமாக 71 வயது முதியவர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். பின்னர் அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். மேலும் ஒரு ஹோட்டலில் முதியவருடன் நெருக்கமாகவும் இருந்துள்ளார். இவர்களது நெருக்கம் தொடர்பான விஷயத்தை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார்.
பின்னர் அந்த வீடியோவை காட்டி அந்த முதியவரை மிரட்ட தொடங்கியுள்ளார். அவ்வப்போது அவரிடம் இருந்து பணம் பறித்து வந்துள்ளார். அதன்படி சுமார் ரூ.3 லட்ச வரை பறிகொடுத்து வந்த முதியவர் தொடர்ந்து ராஜியின் மிரட்டலால் கோபமடைந்துள்ளார். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று எண்ணியுள்ளார்.
அதன்படி காவல்துறையில் ராஜி மீது புகார் அளித்துள்ளார் முதியவர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இளம்பெண் ராஜியை கைது செய்தனர். மேலும் முதியவர் போல் வேறேனும் இவரது வலையில் சிக்கி பணத்தை பறிகொடுத்துள்ளனரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இளம்பெண் ஒருவர், 71 வயது முதியவரை தனது காதல் வலையில் சிக்க வைத்து அவரை மிரட்டி பணம் பறித்து வந்துள்ள சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!