India
ஆந்திரா கூட்டு பாலியல்: ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..சிறுவன் உட்பட 3 பேர் கைது
ஆந்திரப் பிரதேச மாநிலம் கிருஷ்ணா பகுதி அருகே ஆதரவற்றோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் தங்கியிருந்து 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் மருத்தவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அனைவரும் சிறுமியிடம் இது குறித்து விசாரித்தனர். பின்னர் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் வந்த அவர்கள் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத கும்பல் தன்னை கடத்தி சென்று, ஆசிரமத்திற்கு அருகே இருக்கும் பாழடைந்த இடத்தில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார். பின்னர் இந்த சம்பவம் பல மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்ததாகவும் அழுதுகொண்டே கூறினார்.
இதையடுத்து இது குறித்து இந்திய தண்டனைச் சட்டம் 363, 376 (2) மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலில் ஒருவரை கைது செய்து விசாரித்தனர். பின்னர் அந்த குற்றவாளி அளித்த வாக்குமூலத்தின் படி அவருடன் சேர்ந்து சிறுவன் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சிறுவனையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை, தற்போது 6 மாத கர்ப்பமாக இருக்கும் சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!