India

பணம் அனுப்பிட்டேன்..எங்க வரல: போலி App-யை பயன்படுத்தி விலை உயர்ந்த செல்போன் வாங்கும்போது சிக்கிய வாலிபர்!

புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள செல்போன் விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. இங்கு இளைஞர் ஒருவர் புதிதாக செல்போன் வாங்க வந்துள்ளார். பின்னர் ஒரு ஒரு புதிய செல்போன்களை பார்த்து விட்டு ரூ. 18 ஆயிரம் மதிப்பிலான செல்போனை வாங்கியுள்ளார்.

பிறகு அந்த வாலிபர் செல்போனுக்கான பணத்தை 'அமேசான் - பே' மூலம் அனுப்புவதாகக் கூறி அனுப்பியுள்ளார். அதன்படி, தனது செல்போனில் இருந்து ரூ. 18,000 அனுப்பி உள்ளார். ஆனால் கடை உரிமையாளருக்குப் பணம் அனுப்பியதற்கான குறுஞ்செய்தியோ அல்லது வங்கி கணக்கில் பணம் சேர்ந்ததற்கான தகவலோ ஏதுவும் வரவில்லை.

இது குறித்து அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த வாலிபர் பணம் அனுப்பியாச்சி என செல்போனில் இருந்து காட்டியுள்ளார். திரும்பத் திருப்ப இதையே கூறியதால் வாலிபர் மீது கடை உரிமையாளருக்குச் சந்தேகம் எழுந்தது.

பின்னர் அந்த வாலிபரைப் பிடித்து விசாரித்ததில் அவர் போலி பண பரிவர்த்தனை செயலி மூலம் பணத்தை அனுப்பியதாக நாடகமாடியது தெரிய வந்தது. அதையடுத்து அந்த வாலிபரை ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

பிறகு போலிஸார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட வாலிபர் மயிலாடுதுறை, மோழைவூர், மேலவளி பகுதியைப் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, 24 என்பதும், இதே பாணியில் பல்வேறு இடங்களில் மோசடி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து சத்தியமூர்த்தி மீது போலிஸார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: இரண்டாவது முறையாக ஆப்பிள் நிறுவனத்துக்கு அபராதம்.. Iphone தொடர்பான கட்டுப்பாட்டை மாற்றுமா ஆப்பிள்?