India
கேள்வி கேட்டு பதில் சொல்லாத மாணவர்.. கோவத்தில் ஆசிரியர் செய்த செயலால் வெடித்துச் சிதறிய சிறுவனின் நரம்பு!
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள கௌதம் புத்தா நகரின் பாம்பாவாட்- மஹாவத் சாலையில் கேப்டன் சன்வாலியா பப்ளிக் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சோரன் என்ற ஆசிரியர் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார்.
இந்த நிலையில், தேர்வு நெருங்கிவருவதால் மாணவர்கள் நன்றாக படித்துவரவேண்டும் என்றும், அடுத்தநாள் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் மாணவர்களிடம் கூறியுள்ளார். அதன்படி அடுத்தநாள் 5-ம் வகுப்பு மாணவர்களிடம் கேள்விகள் கேட்டுள்ளார்.
அப்போது, 12 வயது சிறுவன் ஒருவன் ஆசிரியரின் கேள்விகளுக்கு பதிலளிக்காததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் சோரன் அந்த மாணவனை இரக்கமின்றி தலையிலும், முதுகிலும் சரமாரியாக அடித்துள்ளார்.இதில் சம்பவஇடத்திலேயே அந்த சிறுவன் மயக்கமடைந்து விழுந்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் இதுகுறித்து மற்ற ஆசிரியர்களிடம் கூறியுள்ளனர்.அவர்கள் அந்த சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர், அந்த சிறுவன் மேல் சிகிச்சைக்காக தில்லியில் உள்ள நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சிறுவனை பரிசோதனை செய்ததில் ஆசிரியர் தாக்கியதில் சிறுவனின் தலையில் மூன்று நரம்புகள் வெடித்துச் சிதறியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!