India
எருமை மாட்டை தொடர்ந்து பசுமாடு மீது மோதி 'வந்தே பாரத்' ரயில் சேதம்.. இரண்டு நாளில் அடுத்தடுத்து விபத்து !
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட டெல்லி - வாரணாசி இடையே இயங்கும் முதல் வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்டத்தை கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் மோடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து 3-வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கடந்த 30ம் தேதி தொடங்கி வைத்தார்.
புதிதாகப் பரிசோதனை செய்யப்பட்ட 3-வது வந்தே பாரத் ரயிலானது 52 நொடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்டி சாதனை படைத்தது. மூன்றாவது வந்தே பாரத் ரயிலின் அதிகபட்ச வேகம் என்பது 180 கி.மீ என்றும், முந்தைய ரயிலின் அதிகபட்ச வேகத்தை ஒப்பிடுகையில் இது 20 கி.மீ. கூடுதல் வேகம் கொண்டது என்றும் அறிவிக்கப்பட்டது.
மும்பையில் இருந்து குஜராத் காந்திநகர் இடையே இயக்கப்படும் இந்த ரயிலானது நேற்று முன்தினம் காலை 11.15 மணியளவில் மனிநகர் ரயில் நிலையத்திற்கும் இடையே சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென நான்கு எருமை மாடுகள் தண்டவாளத்தில் குறுக்கிட்டது. இதன் காரணமாக வந்தே பாரத் ரயில் விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் ரயில் என்ஜினின் முன்பகுதி சேதமடைந்தது. மேலும் 4 எருமை மாடுகள் உயிரிழந்துள்ளன. இதையடுத்து எருமைகள் மோதியதில் ரயிலின் முன்பகுதி உடைந்து விழுந்தது காட்சி இணையத்தில் வைரலானது. அதைத் தொடர்ந்து வந்தே பாரத் விரைவு ரயில் மீது மோதி சேதம் ஏற்படுத்திய விவகாரத்தில் எருமை மாடுகளில் உரிமையாளர்கள் மீது குஜராத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்பு போலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் விபத்தில் சிக்கியுள்ளது. நேற்று குஜராத்தில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்தபோது மும்பையில் இருந்து 433 கிமீ தொலைவில் உள்ள கஞ்சாரி மற்றும் ஆனந்த் நிலையங்களுக்கு இடையே மாலை 3.49 மணியளவில் தண்டவாளத்தை கடந்த பசுமாடுகள் மீது மோதியது. இந்த விபத்தில் ரயிலின் முன்பகுதி சேதமடைந்த நிலையில், பயணிகளுக்கு ஏதும் நிகழவில்லை என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Also Read
-
பூம்புகார் கைத்திறன் விருதுகள் : 227 கைவினை கலைஞர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினார் அமைச்சர் TM அன்பரசன்!
-
மசூதியை ஆய்வு செய்ய அனுமதி - ”மதவாதத்துக்கு துணை போகிறதா உச்சநீதிமன்றம்?” : பிருந்தா காரத் கேள்வி!
-
குடியரசுத்தலைவர் உரையில் இடம் பெறாத ’சோசலிஸ்ட்’, ’மதச்சார்பற்ற’ சொற்கள் : டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு!
-
நாளை உருவாகும் FENGAL புயல் : 2 நாள் சென்னைக்கு கன மழை எச்சரிக்கை!
-
“அதானி ஊழலை திசைத் திருப்ப பார்க்கிறார்” - மருத்துவர் ராமதாஸ் அறிக்கைக்கு வைகோ கண்டனம்!