India

“சடலத்துடன் 4 மாதங்கள் தங்கி இருந்த பேரன் - பாட்டியை கொலை செய்ய உடந்தையாக இருந்த தாய்” : பகீர் தகவல்!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள கெங்கேரி சாட்டிலைட் டவுன் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் வாசுதேவ் (27). இவர் தனியார் நிறுவனத்தின் பணியாற்றி வந்துள்ளார். வாசுதேவுடன் அவரது அம்மா மற்றும் தந்தையின் அம்மா (பாட்டி) இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2017ம் இவர் வசித்து வந்த வீட்டில் இருந்து திடீரென்று வீட்டை விட்டு வெளியேறி, வெளிப்புறம் பூட்டிவிட்டு கிளம்பியுள்ளார். வீட்டின் உரிமையாளர் ஃபோன் செய்து வாசுதேவிடம் பேசியுள்ளார். அதற்கு அவசர வேலையாக சொந்த ஊருக்கு வந்திருகின்றோம்; அடுத்த மாதம் வந்துவிடுவதாக கூறியுள்ளார்.

ஆனால் ஒருமாதத்திற்கு மேல் ஆகியும் வாசுதேவ் வராததால், மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அவரை தொடர்புக்கொள்ள முடியவில்லை. வீட்டின் வெளியே பூட்டி இருந்ததால், வீட்டின் உரிமையாளரும் உள்ள செல்லமுடியாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், 4 மாதங்களுக்கு பிறகு வீட்டில் இருந்து துருநாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளேச் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது வீட்டில் இருந்த அலமாரி ஒன்று திறக்கமுடியாத வகையில் சிமிண்ட் கொண்டு பூசப்பட்டிருந்தது. அதனை உடைத்து பார்த்தபோது, வாசுதேவின் பாட்டி அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனையடுத்து போலிஸார் உடலை மீட்டு, வழக்குப்பதிவு செய்து வாசுதேவ் மற்றும் அவரது அம்மாவைத் தேடி வந்தனர்.

பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், மகாராஷ்டிராவில் பதுங்கி இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மகாராஷ்டிராவுக்குச் சென்ற போலிஸார் அங்கு தேடியும் கிடைக்காத நிலையில் மீண்டும் கர்நாடகா திரும்பினர்.

இந்நிலையில், 5 வருடங்களுக்கு பிறகு வாசுதேவ் பற்றிய தகவல் கிடைக்கவும் மீண்டும் பெங்களூரில் இருந்து போலிஸார் மகாராஷ்டிரா சென்றுள்ளார். அங்கு வாசுதேவ் மற்றும் அவரது அம்மாவையும் கைது செய்து அழைத்து வந்து விசாரணை செய்துள்ளனர்.

விசாரணையில் பகீர் தகவல் தெரியவந்துள்ளது. வாசுதேவின் பாட்டி பழைய சம்பிரதாயங்களை பின்பற்றுவதால் வீட்டில் அடிக்கடி சண்டை வந்துள்ளது. மேலும் கடையில் வாங்கிய உணவை கொண்டுவந்து சாப்பிடக்கூடாது என திட்டியுள்ளனர்.

இதனால் பாட்டின் மீது வாசுதேவ் கோவமாக இருந்தநிலையில் பாட்டி மீண்டும் வாசுதேவிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாசுதேவ் இரும்புக் கம்பியால் பாட்டியை அடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

வெளியே தெரிந்தால் மாட்டிக்கொள்வோம் என நினைத்து பாட்டியை அலம்பாரியில் வைத்து சிமிண்ட் வைத்து பூசியுள்ளனர். பின்னர் 4 மாதங்கள் அதேவீட்டில் வசித்தும் வந்துள்ளனர். துருநாற்றம் வீசவில்லை என்பதால் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர் எனத் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: செல்போன் வாங்கி தர மறுத்து கண்டித்த கணவர்.. மன உளைச்சலில் விபரீத முடிவு எடுத்த மனைவி!