India
சிறுமி பாலியல் வன்கொடுமை : குற்றவாளிக்கு 142 ஆண்டுகள் சிறை தண்டனை.. கேரள நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு !
கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்தவர் அனந்தன் என்கிற பாபு. 41 வயதுடைய இவர், கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வர தனது உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார். அங்கு 10 வயதில் சிறுமியும் இருந்துள்ளார். அந்த சிறுமியை, பாபு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமியும் தனது பெற்றோரிடம் கூறவில்லை.
இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு சிறுமியின் பெற்றோருக்கு இது குறித்து தெரியவர, அவர்கள் காவல்துறையில் புகார் தெரிவித்தனர். இதைதொடர்ந்து அவர்கள் பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பத்தனம்திட்டா போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், பாபு குற்றவாளி என்று நிரூபனம் ஆனது.
இதையடுத்து தற்போது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி 41 வயதுடைய குற்றவாளி பாபுவுக்கு 142 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் அபராதத்தொகை செலுத்தவில்லை என்றால், சிறை தண்டனை மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம் இவர் இனி தன் வாழ்நாளை சிறையில் கழிப்பார் என்று தெரிய வந்துள்ளது. போக்சோ வழக்குகளிலேயே இதுவரை கொடுக்கப்பட்ட அதிகபட்ச தண்டனையாக இது கருதப்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!