India
புதையல்,சொத்து கிடைக்கும் என நம்பிக்கை.. 6 வயது சிறுவனை நரபலி கொடுத்த இளைஞர்கள்..டெல்லியில் அதிர்ச்சி !
தெற்கு டில்லி லோதி காலனியில் பீகாரை சேர்ந்த விஜயகுமர், அமர் குமார் ஆகிய கட்டுமான தொழிலாளிகள் அவர்களுடன் பணியில் இருந்த தம்பதியின் 6 வயது மகனை பலிகொடுத்தால் புதையல் மற்றும் சொத்துகள் கிடைக்கும் என்று நம்பியுள்ளார்கள். இதை அடுத்து அஜ்ரவனை கடத்திச் சென்று அவர்களது குடிசையில் வைத்து கொலை செய்துள்ளனர் . சம்பவம் தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் CRPF கட்டுமான வளாகத்தில் பீகாரை சேர்ந்த விஜயகுமர், அமர் குமார் என்ற தொழிலாளர்கள் வேலை செய்துவந்துள்ளனர். இவர்களுக்கு போதைப்பழக்கமும் இருந்துள்ளது. ஆனால், இதுவரை யாரிடமும் பிரச்சனை செய்யாததால் அதுகுறித்து யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை.
இந்த நிலையில், அசோக் என்ற கட்டிட தொழிலாளி உத்தரபிரதேசத்தின் பரேலியில் இருந்து வேலைக்காக தனது குடும்பத்துடன் டெல்லி வந்து கட்டிட வேலை செய்துவந்துள்ளார். இவர்களது 6 வயது மகன் திடீரென காணாமல் பயுள்ளார்.
அவரை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது, பீகாரை சேர்ந்த அந்த தொழிலாளர்கள் தங்கள் மகனின் சடலத்தை மறைப்பதை சிறுவனின் தந்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் விரைந்து அங்கு சென்று பார்த்தபோது தனது மகன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டுள்ளார். இது தொடர்பாக அங்குள்ளவர்கள் காவல்நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர்.
அதன்படி விரைந்து வந்த போலிஸார் 6 வயது சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து போலிஸார் நடத்திய விசாரணையில்,புதையல் மற்றும் சொத்துகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையால் பீகார் தொழிலாளர்கள் சிறுவனை கடத்தி நரபலி கொடுத்தது தெரியவந்தது. பின்னர் பீகார் தொழிலாளர்கள் விஜயகுமர், அமர் குமார் ஆகியோரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!