India
விடுதி மாணவிகளே உஷார்..! மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்த துப்புரவு பணியாளர்.. வசமாக சிக்கியது எப்படி ?
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் துல்சி நகர் என்ற பகுதி உள்ளது. இங்கு மருத்துவ தேர்வுகளுக்காக தயாராகும் மாணவிகள், தங்கி படிக்கும் பெண்கள் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த விடுதியில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவிகள் தங்கள் வசதிக்காக தங்கியுள்ளனர். இந்த விடுதியை அந்த பகுதியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரியான கூடுதல் எஸ்.பி ஒருவர் நடத்திவருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இந்த விடுதியின் துப்புரவு பணியாளர் ஒருவர், அங்கிருந்த மாணவி ஒருவர் குளித்துக்கொண்டிருக்கும்போது அவரை இரகசியமாக மறைந்திருந்து தனது மொபைல் போனில் படம் பிடித்துள்ளார். இதனை கண்ட சக மாணவி ஒருவர், அவரை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த மொபைல் போனை பறிமுதல் செய்துள்ளார்.
பின்னர் அதனை சோதித்தபோது அதில், பல பெண்களின் புகைப்படங்கள், வீடியோக்கள், குளியல் வீடியோக்கள் என பல ஆபாசமான விஷயங்கள் இருந்துள்ளது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, சக பெண்களிடம் தெரிவித்தது மட்டுமின்றி, இவரை விடுதி காப்பாளரிடம் ஒப்படைத்தார்.
பின்னர் அவர்கள் குற்றவாளியான துப்புரவு பணியாளரை தப்பிக்க விடாமல் பார்த்துக்கொண்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரது மொபைல் போனையும் பறிமுதல் செய்தபோது அதில் வீடியோ இருந்தது உறுதியானது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக சண்டிகர் பல்கலைக்கழத்தில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள் 60 பேரின் குளியல் வீடியோக்களை சக மாணவி ரகசியமாக பதிவு செய்து அது இணையதளத்தில் வெளியானதால் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!