India

இனி நீரிலும் வானிலும் பயணிக்கலாம்.. சீனா உருவாக்கிய அட்டகாசமான விமானம் ! சிறப்பம்சம் என்ன ?

அறிவியல் நாளுக்கு நாள் எப்போதும் வளர்ந்தே வருகிறது. 100 வருடங்களுக்கு முன்னர் ஆகாய விமானங்கள் உலகம் முழுவதும் பிரபலான நிலையில், தற்போது நீரிலும் வானிலும் பயணிக்கும் திறன் படைத்த விமானங்கள் வரை உலகம் வளர்ச்சி கண்டுள்ளது.

சீனா நிறுவனம் விமானம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இந்த விமானம் நீரிலும் வானிலும் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு தன்னில் 12 டன் தண்ணீரை எடுத்துக்கொண்டு பயணிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

AG 600 M என பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம், நீர்நிலைகளில் பயணிக்கும்போது 15 விநாடிகளில் 12 டன் தண்ணீரை உறிஞ்சும் திறன் கொண்டுள்ளது. காட்டுத்தீ, தீவிபத்து போன்ற பேரழிவு சூழ்நிலையில் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தான் உறிஞ்சியெடுக்கும் நீரினை சரியான இடத்தில் தெளித்து பேரழிவை இந்த விமானத்தால் தடுக்க முடியும் என தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 560 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த விமானம் உச்சபட்சமாக 20 ஆயிரம் உயரத்தில் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Also Read: ”இவரைப் போல ஒரு வீரர் பாகிஸ்தான் அணிக்கு நிச்சயம் தேவை” - இந்திய வீரரை புகழ்ந்த ஷாஹித் அப்ரிடி !