India
“பாலியல் தொழில்.. VIP-களுக்கு போதை விருந்து” : பா.ஜ.க தலைவர் மகன் விடுதியில் நடந்த அவலம் - பகீர் தகவல்!
உத்தரகாண்ட் மாநிலம் ரஷிகேஷில் பா.ஜ.க தலைவரும் முன்னாள் அமைச்சராகவும் இருந்த வினோத் ஆர்யா அப்பகுதியில் ரிசார்ட் ஒன்றை சொந்தமாக வைத்துள்ளார். அந்த ரிசார்ட்டை அவரின் மகன் புல்கித் ஆர்யா நிர்வகித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்தமாதம் இவரின் ரிசார்ட்டுக்கு பவுரி கர்வால் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் வரவேற்பாளராக சேர்ந்துள்ளார். இதனிடையே கடந்த வாரம் அப்பெண் திடீரென மாயமாகியுள்ளார்.
இதனையடுத்து போலிஸார் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணிடன், அதிக பணம் தருவதாகவும், விடுதிக்கு வரும் நபர்களை கவணித்துக்கொண்டால் கூடுதல் பணம் தருவதாக கூறியுள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரத்தில் இருந்த புல்கித் ஆர்யா மற்றும் ரிசார்ட் மேலாளர் சவுரப் பாஸ்கர், ஊழியர் அங்கித் குப்தா ஆகியோர் குடிபோதையில் ரிசார்ட்டுக்குச் சென்று அந்த பெண்ணை பாலியல் உறவுக்கு ஒப்புக்கொள்ளும்படி மிரட்டியுள்ளனர்.
இதனால் அந்த பெண் மறுப்புத் தெரிவித்து கூச்சலிட்டுள்ளார் இதனால் ஆத்திரத்தில் அந்த பெண்ணை மூன்று பெரும் அடித்து கொலை செய்துவிட்டு உடலை அருகில் இருந்த கால்வாயில் தூக்கிப்போட்டுவிட்டு எதுவும் தெரியாததுபோல் நடித்துள்ளனர்.
இதனையடுத்து போலிஸார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் ரிசார்ட்டை அடித்து நொறுக்கி தீ வைத்து எரித்த சம்பவமும் அரங்கேறியது. மேலும் போலிஸார் இதுதொடர்பாக தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கில் ரிசார்ட்டின் முன்னாள் ஊழியர் ஒருவரை அழைத்து விசாரிக்கையில், “அந்த ரிசார்ட்டில் பாலியல் தொழில், போதைப்பொருட்கள் புழக்கம் போன்றவை சட்டவிரோத நடவடிக்கைகள் அடிக்கடி நடந்துவந்தன. மேலும் புல்கித் ஆர்யா அடிக்கடி சிறப்பு விருந்தினர்களை அழைத்து வந்து மது விருந்து மற்றும் பெண்களை பாலியல் தொழிலுக்கு அனுப்பி வைப்பார்.
பல அடையாளம் தெரியாத பெண்களை அழைத்து வந்துள்ளார். அந்தப் பெண்கள் சிறப்பு விருந்தினர்களுடன் இருப்பார்கள். அவர்களுக்கு புல்கித் ஆர்யாவினால் ஏற்பாடு செய்யப்படிருக்கும் உயர் ரக மதுவுடன் கஞ்சா போன்ற போதைப்பொருட்களும் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!