India

10 youtube சேனல்களில் இருந்து 45 வீடியோக்களை முடக்கிய ஒன்றிய அரசு.. காரணம் என்ன?

ஒன்றிய அரசு கடந்த ஆண்டு புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் அடிப்படையில் சில திருத்தங்களைக் கொண்டு வந்தது. இந்த சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் தவறான மற்றும் பொய்யான தகவல்களைப் பரப்பும் youtube மற்றும் சமூகவலைத்தள பக்கங்களை ஒன்றிய அரசு தொடர்ச்சியாக முடக்கி வருகிறது.

ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட youtube சேனல்களை ஒன்றிய அரசு முடக்கியுள்ளது. இந்நிலையில் 10 youtube சேனல்களில் இருந்து 45 வீடியோக்களை ஒன்றிய அரசு முடக்கியுள்ளது.

அக்னிபாத் திட்டம், இந்திய ஆயுதப் படைகள், இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு, காஷ்மீர் போன்ற பிரச்சனைகள் குறித்து தவறான தகவல்களை பரப்பியதால் இந்த 45 வீடியோக்கள் முடக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Also Read: "உலக சாதனை படைத்த இந்திய அணி" -பாகிஸ்தான் சாதனையை உடைத்து வெற்றிக்கொடியேற்றிய ரோஹித்தின் படை !