India
இறந்த உடலை பிரேதப்பரிசோதனை செய்த பட்டியலின மருத்துவர்:உடலை வாங்க மறுத்த உறவினர்கள்.. ஒடிசாவில் அதிர்ச்சி!
ஒடிசா மாநிலம் பர்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் முச்சுனு சந்தா. கூலித்தொழிலாளியான இவர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலயில், இவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரது உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த நிலையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பட்டியல் சமூகத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர் அந்த உடலுக்கு பிரதேப்பரிசோதனை செய்தார்.
பின்னர் அவரது உடல் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அந்த உடலுக்கு பட்டியல் சமூகத்தை சேர்ந்த மருத்துவர் பிரதேப்பரிசோதனை செய்துள்ளது அவர்களுக்கு தெரியவந்துள்ளது. அதன்பின்னர் கிராம மக்களும் உறவினர்களும், முச்சுனு சந்தாவின் உடலை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் கிராம பஞ்சாயத்து பெண் தலைவரின் கணவர் சுனில் பெஹரா என்பவர் ஆம்புலன்ஸை வரவழைத்து முச்சுனுவின் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல ஏற்பாடுகளை செய்தார். ஆனால் சுடுகாட்டிற்கு செல்லும் சாலை சரியில்லாததால் ஆம்புலன்ஸ் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சுனில் பெஹரா, தனது பைக்கில் முச்சுனுவின் உடலை கட்டிக் ெகாண்டு, ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவரது உதவியாளர் உதவியுடன் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று அங்கு உடலை தகனம் செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!