India
52 ஆண்டுகள்..ரூ.3.5 கோடிக்கு லாட்டரி சீட்டு வாங்கிய கூலித் தொழிலாளி..வென்ற பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
உலகம் முழுவதும் லாட்டரி டிக்கெட் விற்பனை மூலம் சிலர் கோடீஸ்வரனாகி வருகின்றனர். அவர்கள் குறித்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பெரும் ஒரே நாளில் அவர்கள் பிரபலமானவர்களாகி விடுகின்றனர். ஆனால் அதேபோல லாட்டரி வாங்கும் பலர் தங்கள் பணத்தை இழந்து வருவதும் நடந்து வருகிறது.
கேரளத்தில் லாட்டரி விற்பனை சிறப்பாக நடந்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அங்கு அரசே லாட்டரி விற்பனை செய்வதால் முறைகேடுகள் குறைந்தாலும், லாட்டரியில் பணத்தை இழக்கும் நிலை அங்கு தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், அப்படி ஒருவரின் கதை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ராகவன் என்பவர் கடந்த 52 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகின்றார். அப்படி வாங்கும் லாட்டரி டிக்கெட்டுகளை மூட்டை கட்டி வைத்தும் வந்துள்ளார்.
இந்த நிலையில், அவர் வைத்து இருந்த பழைய லாட்டரி சீட்டுகளை மொத்தமாக எண்ண ஆரம்பித்தபோது அதில் அதிர்ச்சி தகவல் ஒன்று தெரியவந்துள்ளது. அந்த லாட்டரி சீட்டுகளைஅனைத்தையும் கூட்டி கணக்கிட்டால் மொத்தம் இதுவரை ரூ.3.5 கோடி அளவுக்கு லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்துள்ளார்.
லாட்டரிக்காக அவர் இந்த அளவு செலவு செய்துள்ளது தகவல் இப்போதுதான் அவருக்கே தெரியவந்துள்ளது. ஆனால் இதுவரை அவர் வென்ற அதிகபட்ச லாட்டரி பரிசுத்தொகையே வெறும் ரூ. 5 ஆயிரம் மட்டும்தான். கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தும் ராகவன், 18 வயதில் லாட்டரி சீட்டு வாங்கத் தொடங்கினார் என்றும் ஒரு நாளைக்கு 10 லாட்டரி சீட்டுகள் வரை வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளார் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!