India
11 லட்சம் காரில் ஏற்பட்ட பழுதுக்கு 22 லட்சம் பில்..ஷோரூம் சர்வீஸ் சென்டரின் செயலால் உரிமையாளர் அதிர்ச்சி!
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் சில தினங்களுக்கு முன்னர் அதிக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பெங்களூர் மாநகரமே வெள்ளக்காடாகக் காட்சியளித்ததுடன் சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் புகுந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
அதிலும் நகரில் உள்ள சென்ட்ரல் சில்க் போர்டு சந்திப்பு முதல் கிருஷ்ணராஜபுரம் சந்திப்பு வரை சுமார் 17 கி.மீ புறநகர் வட்டச்சாலை சாலையில் 500க்கும் மேற்பட்ட ஐ.டி நிறுவனங்கள் அமைந்துள்ளது. இந்த பகுதி முழுவதும் மழை நீரால் மூழ்கியது. இப்பகுதியில் மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யாததே இந்த நிலைக்குக் காரணம் என கூறப்பட்டது.
இந்த மழை வெள்ளம் காரணமாக ஐ.டி நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.225 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் தகவல் வெளியானது. இதனால் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவில்லை என்றால் தங்களது நிறுவனத்தை வேறு இடத்துக்கு மாற்றுவோம் ஐ.டி நிறுவனங்கள் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்குக் கடிதம் எழுதினர். பின்னர் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.
பெங்களூரு மழை வெள்ளத்தில் ஏராளமான கார்கள் நீரில் மூழ்கின. அதைத் தொடர்ந்து அதனை பழுது நீக்க ஏராளமான நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்தன. இந்த நிலையில், ரூ.11 லட்சம் மதிப்புள்ள கார் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் அதை ரிப்பேர் செய்ய ரூ22 லட்சம் செலவாகும் என ஷோரூம் சர்வீஸ் சென்டர் பில் அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த அனிரூத் கணேஷ்ர் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் போலோ காரை பயன்படுத்தி வந்துள்ளார். சமீபத்தில் பெங்களூருவில் பெய்த மழையால் அனிரூத்தின் காரும் பலத்த சேதமடைந்து முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கியது.இதையடுத்து அனிரூத் இந்த காரை அருகில் உள்ள பெங்களூரு ஒயிட் ஃபீல்டு பகுதியில் செயல்பட்டு வரும் ஷோரூம் சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்றார்.
அங்கு தனது காரை ஒப்படைத்துவிட்டு அதற்கான ரிப்பேர் குறித்து விபரம் தெரிவிக்கும்படி சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். சுமார் 20 நாட்களுக்கு பிறகு அனிரூத்திற்கு காருக்கான ரிப்பேர் செலவிற்கான எஸ்டிமேஷன் பில்லை ஷோரூம் சர்வீஸ் சென்டர் அலுவலர்கள் அனுப்பியுள்ளனர். அதில் ரூ.11 லட்சம் மதிப்புள்ள காரை ரிப்பேர் செய்ய ரூ22 லட்சம் செலவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அனிரூத் இது குறித்து அவர் ஷோரூம் சர்வீஸ் சென்டரை அணுகியுள்ளார். அப்பொழுது இந்த பணத்தைக் கட்டினால் தான் இந்த காருக்கான இன்சூரன்ஸ் பணத்தை வாங்க முடியும் என்றும், தங்கள் ஷோரூமிலேயே புதிதாக கார் வாங்கினால் இந்த பணத்தை முற்றிலுமாக தள்ளுபடி செய்து தருவதாகவு கூறியுள்ளனர். இதையடுத்து இவர் இந்த தகவல்களுடன் லிங்க்டு இன்னில் பதிவு ஒன்றைப் போட்டுள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?