India

Hello உள்ளே வரலாமா.. அனுமதி கேட்டு பள்ளிக்குள் நுழைந்த முதலை: பீதியடைந்து ஓடிய மாணவர்கள்!

உத்தர பிரதேச மாநிலம், காசிம்பூர் கிராமத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கிராமம் கங்கை ஆற்றின் அருகே இருப்பதால் முதலைகள் அடிக்கடி ஊருக்குள் நுழைந்து பொதுமக்களுக்குத் தொல்லை கொடுத்து வருகிறது.

இது குறித்து கிராம மக்கள் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கிராமத்தில் உள்ள பள்ளி வாளத்திற்குள் முதலை ஒன்று நுழைந்துள்ளது. இதைப்பார்த்து மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர் மாணவர்கள் தடிகளைக் கொண்டு முதலைகளைத் தாக்கி வகுப்பறைக்குள் வைத்துப் பூட்டிவைத்துள்ளனர். இது குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

பிறகு அங்கு வந்த வனத்துறையினர் முலையை மீட்டு மீண்டும் கங்கை ஆற்றுக்குள் விட்டனர். முதலைகள் கிராமத்திற்குள் நுழையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: கர்நாடகா : பெற்ற பிஞ்சு குழந்தையை ரூ.50,000-க்கு விற்ற தந்தை.. காரணத்தை கேட்டு அதிர்ந்த அதிகாரிகள்..