India
ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த பெண்.. பாலியல் வன்கொடுமை செய்த ஜொமேட்டோ ஊழியர்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி !
மகாராஷ்டிர மாநிலம் புனே யெவலேவாடி பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் வழியாக ஜொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். அதன்படி உணவை ஜொமேட்டோ டெலிவரி ஊழியரான ஊழியரான ரயீஸ் ஷேக் என்பவர் கொண்டுவந்துள்ளார்.
அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற அந்த பெண் உணவை டெலிவரி செய்து அந்த பெண்ணிடம் தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் அந்த பெண் வீட்டின் உள் சென்றுள்ளார். அப்போது அவர் பின் வீட்டின் உள்ளே சென்றவர் அங்கு ஆள் யாரும் இல்லை என்பதை அறிந்துள்ளார்.
பின்னர் அந்த பெண்ணிடம் சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இந்த சம்பவம் வெளிவந்துள்ளது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் ஜொமேட்டோ டெலிவரி ஊழியரான ரயீஸ் ஷேக்கை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் ஏற்கனவே இதேபோன்றதொரு பாலியல் வன்கொடுமை வழக்கில் ரயீஸ் ஷேக் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!