India
வேறொருவரை காதலித்த காதலி.. பொறுக்கமுடியாமல் தவித்த முன்னாள் காதலன் ! இறுதியில் நடந்த விபரீதம் !
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர், அதே பகுதியில் இருக்கும் பவன் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு மனஸ்தாபம் வந்ததால் அந்த இளம்பெண், பவனுடனான காதலை முறித்துள்ளார்.
பின்னர் அந்தோணி என்ற இளைஞருடன் காதல் உறவில் இருந்து வந்துள்ளார் அந்த இளம்பெண். தனது முன்னாள் காதலி வேறு ஒரு இளைஞரை காதலித்து வருவது பவனுக்கு பிடிக்காமல் இருந்துள்ளது. இதனால் தன்னை விட்டு சென்ற காதலியிடம் மீண்டும் பேசுவதற்கு முயன்றுள்ளார் பவன். ஆனால் அவரோ இவரை சந்திக்க மறுத்து வந்துள்ளார்.
இதனால் மிகுந்த கோபத்தில் இருந்த பவன் அவர்களை ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணியுள்ளார். அதன்படி தனது நண்பர்களை அழைத்து அந்தோணியை கொலை செய்ய வேண்டுமென்று திட்டம் தீட்டியுள்ளார். அப்போது சம்பத்தன்று அங்குள்ள குயின்ஸ் சாலையில் பைக்கில் ஒன்றாக சென்றுள்ளனர். அதை கண்டதும் ஆத்திரமடைந்த பவன், உடனே தனது நண்பர்களுக்கு தகவல் கொடுத்து அவர்கள் பைக் மீது மோதி சண்டையிட்டுள்ளார்.
இந்த சண்டை இருதரப்பினரிடையே கைகலப்பாக மாறியதால், அங்கிருந்த இளம்பெண் சமாதானப்படுத்த முயன்றுள்ளார். ஆனால் அதில் பவன், தான் மறைத்து வைத்திருந்த எடுத்து அந்தோணியை கொலை செய்ய முயன்றுள்ளார்.
இவையனைத்தும் கண்ட பொதுமக்கள் அந்த இருதரப்பினரையும் சமாதானப்படுத்தியுள்ளனர். கூட்டம் சேர்ந்ததை கண்ட பவன் மற்றும் அவரது நண்பர்கள் அந்த இடத்தை விட்டு தப்பிச்சென்றனர். இதையடுத்து அந்த பெண்ணும், அந்தோணியும் அங்கிருந்த காவல்துறைக்கு சென்று முன்னாள் காதலன் பவன் மீதும், அவர்கள் நண்பர்கள் மீதும் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சம்பவம் நடந்த இடத்தில இருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர். அதில் பவன் மற்றும் அவரது நண்பர்கள், அந்தோணியை தாக்கியதும் கொலை செய்ய முயன்றதும் பதிவாகியிருந்தது. இதயடுத்து அவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
தன்னை விட்டு போன முன்னாள் காதலி, வேறொருவருடன் சந்தோசமாக இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத இளைஞர், காதலியின் காதலனை கொலை செய்ய முயன்றுள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !