India
ஹரியானா : தொடர் பாலியல் வன்கொடுமை.. குடும்ப வறுமையால் வேலைக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடுமை !
ஹரியானா மாநிலம் குருகிராம் என்ற பகுதியில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்ப வறுமை காரணமாக கடந்த 1 மாதத்திற்கு முன்பாக வேலை தேடி அழைந்துள்ளார். அப்போது பூஜா இளம்பெண் அறிமுகமாகியுள்ளார். அவர் சிறுமியை ஒரு மருத்துவ க்ளினிகில் வேலைக்கு சேர்த்து விடவே, அவரது பணி பிடிக்காமல் மருத்துவர் வேலைக்கு வர வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இதனால் மீண்டும் பூஜாவை சந்தித்து வேறு வேலை வாங்கி கொடுக்குமாறு கேட்டுக்கொண்டதன் பேரில் அவர் சிறுமியை ஒரு ஸ்பா-வில் வரவேற்பாளராக சேர்த்துள்ளார். மேலும் அது தனது அத்தையின் ஸ்பா தான் என்றும், பயப்பட வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இவரை நம்பி அங்கு வேலைக்கு சேர்ந்த சிறுமிக்கு பல கொடுமைகள் அரங்கேறியுள்ளது.
சிறுமி வேலைக்கு சேர்ந்த முதல் நாளே அவரை வலுக்கட்டயமாக ஒரு அறைக்குள் தள்ளி, அங்கு அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். இதனால் மிகவும் நொந்துப்போன சிறுமி, இனி வேலைக்கு வர மாட்டேன் என்று கூறவே, அவரை வீடியோ எடுத்து வைத்திருப்பதாக மிரட்டி வந்துள்ளனர். இதனால் சிறுமி பயந்து மீண்டும் வேலைக்கு வந்துள்ளார். ஆனால் அந்த முறை, நாளொன்றுக்கு 10- 15 பேர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த கொடுமை அதிகரித்ததால் ஆத்திரப்பட்ட சிறுமி, இனி வேலைக்கு வர மாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் அவர்கள் குறித்து புகாரும் கொடுக்க சென்றுள்ளார். அப்போது அவரை வன்கொடுமை செய்தவர்களில் ஒருவர் சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக கூறவே, அவரும் புகார் கொடுக்காமல் திரும்பியுள்ளார்.
பின்னர் அவரிடம் திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும், மீறி புகார் கொடுத்தால் குடும்பத்தாரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். பின்னர் சிறுமி தனது பெற்றோர் உதவியுடன் மீண்டும் காவல் நிலையத்திற்கு வந்தார். ஆனால் இம்முறை அனைவர் மீதும் புகார் கொடுத்துள்ளார். புகார் கொடுத்ததையடுத்து அவர்கள் மீண்டும் அந்த சிறுமியின் குடும்பத்தினரை மிரட்டவே, மீண்டும் அந்த சிறுமி இவர்கள் மீது மிரட்டுவதாக புகார் கொடுத்துள்ளார்.
இரு புகாரின் அடிப்படையிலும் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பூஜா, ஜுமா, ரூபல் மற்றும் சதாம் ஆகிய 4 பேர் மீதும் 376-டி (கும்பல் பலாத்காரம்), 323 (காயத்தை ஏற்படுத்துதல்), 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்), மற்றும் 34 (பொது நோக்கம்) IPC மற்றும் POCSO சட்டத்தின் பிரிவுகள் 6, 13, 14, 17 ஆகியவற்றின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
மேலும் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமிக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, அவரை பாலியல் வன்கொடுமைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!