India
பெற்றோர்களின் மூட நம்பிக்கை.. பாம்பு கடித்த சிறுமிகளை சாமியாரிடம் கூட்டிச் சென்றதால் நடந்த விபரீதம்!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகளைப் பாம்பு கடித்துள்ளது. இதனால் சிறுமிகள் இருவரும் அலறியடித்து மயக்கமடைந்து விழுந்துள்ளனர். இதைப்பார்த்த அவர்களது பெற்றோர் உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்குப் பதில் அலிபூர் கிராமத்தில் உள்ள வாலா பாபா என்ற சாமியாரிடம் அழைத்துச் சென்றனர்.
அப்போது, சாமியார் சிறுமிகளின் தலையில் அடித்து மந்திரம் ஓதியுள்ளார். மேலும் மூன்று மணி நேரம் சிறுமியை அங்கேயே வைத்துள்ளனர். ஆனால் சிறுமிகள் இருவரும் கண் முழிக்கவில்லை.
இதனால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமிகள் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டுப் பெற்றோர்களும், கிராம மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பெற்றோர்களின் மூட நம்பிக்கையால் பாம்பு கடித்த சிறுமியைச் சாமியாரிடம் அழைத்துச் சென்றதால் அவர்கள் உயிரிழந்த சம்பவம் கிராமம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!