India

Account-ல் விழுந்த 'ரூ.11 ஆயிரம் கோடி'.. சில நிமிடங்களிலே மாயமாய் போனதால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் !

குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் சாகர். கடந்த 6 ஆண்டுகளாக ஸ்டாக் மார்கெட்டில் முதலீடு செய்து வரும் இவர், கடந்த ஆண்டு கொடாக்கில் டிமேட் அக்கவுண்ட் ஒன்றையும் ஓபன் செய்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் இவரது எண்ணிற்கு ஒரு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் உங்கள் கணக்கில் ரூ.11ஆயிரம் கோடி பணம் போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ல் அவர் முதலீடுசெய்த பணமே 2 கோடியே 5 லட்சம் தான். எனவே அவரது 11ஆயிரம் கோடி எப்படி தனது account-ற்கு வந்தது என்று ஆச்சரியத்தில் இருந்துள்ளார்.

ஆனால் அடுத்த 2 மணி நேரத்திலேயே அவரது Account-ல் இருந்த அந்த பணத்தை வங்கி திரும்ப பெற்றுள்ளது. இதனால் மேலும் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவரது எண்ணிற்கு மீண்டும் ஒரு மெசேஜ் வந்தது. அதில் "டெக்னிக்கல் பிரச்னை காரணாமாக தவறுதலாக உங்களது வங்கி கணக்கிற்கு வந்தது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சம்பவம் நடந்த அன்று, ரமேஷ் வங்கி கணக்கிற்கு மட்டுமல்லாமல் பலரின் வங்கி கணக்கிற்கும் இது போன்று கோடி கணக்கில் பணம் டெபாசிட் செய்து, மீண்டும் எடுக்கப்பட்டது. இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "நான் இவர்களை கவரவே 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் நடித்தேன்.." - நடிகர் சிம்பு சொன்ன Secret !