India
ஒடிசா : மனைவியின் கிட்னியை விற்று இரண்டாவது திருமணம்.. கணவர் செய்த செயலால் அதிர்ச்சி !
ஒடிசா மாநிலம் கோட மேட்டா என்ற பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் கந்து. வங்கதேசத்தில் இருந்து அகதியாக வந்த இவருக்கும் ரஞ்சிதா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
மது போதைக்கு அடிமையாக இருந்து வந்த பிரசாந்த் அவரது குடும்பத்தை சரிவர கவனித்து வராமல் இருந்துள்ளார். மேலும் அவருக்கு வேறொரு பெண்ணுடன் சவகாசம் இருந்து வந்துள்ளது. இதனால் அவரது இரகசிய காதலியுடன் வாழ வேண்டும் என்று நினைத்த அவர், தன்னிடம் பணமில்லை என்பதை உணர்ந்தார். இதனால் குறுகிய காலத்தில் பணத்தை எப்படி சம்பாதிப்பது என்று எண்ணிய அவர் ஒரு திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி, தனது மனைவி ரஞ்சிதாவின் கிட்னியில் கல் இருப்பதாக நம்ப வைத்து, அதற்காக ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று அவரிடம் கூறவைத்து தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கே அவருக்கு செய்யப்பட்ட ஆப்ரேஷன் மூலம் அவரது கிட்னியை திருடி விற்றுள்ளார் கணவர்.
மனைவியின் கிட்னியை திருடி விற்பட்ட பணத்தை எடுத்துக்கொண்டு தனது காதலியை திருமணம் செய்து அவருடன் பெங்களுருவில் வாழ்ந்து வந்துள்ளார் பிரசாந்த்.
இந்த நிலையில் ரஞ்சிதாவுக்கு கடந்த சில நாட்களாக வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் சோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு ஒரு கிட்னி தான் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அதிர்ந்த ரஞ்சிதா தனது கணவரிடம் இது குறித்து கேட்டுள்ளார்.
அப்போது, தான் தான் கிட்னினை விற்று, வேறு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் ரஞ்சிதாவை அவமானமும் படுத்தியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான ரஞ்சிதா, தனது கணவர் பிரசாந்த் மீது காவல்துறையில் மோடி புகார் அளித்தார். மேலும் அவர் தனது கிட்னியை தனக்கே தெரியாமல் விற்று வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாகவும் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து புகாரின் அடிப்படியில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் ரஞ்சிதாவின் கணவர் பிரசாந்தை தனிப்படை அமைத்து பெங்களுரு சென்று கைது செய்துள்ளனர். மனைவியின் கிட்னியை விற்று இரண்டாவது திருமணம் செய்த கணவரின் செயல் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!