India
வன்கொடுமை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்ட 2 பட்டியலின சிறுமிகள் வழக்கில் திருப்பம்.. உ.பி-யில் அதிர்ச்சி !
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர்கேரி என்ற பகுதியை சேர்ந்த 17, 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் மரத்தில் தொங்கிய நிலையில் இருந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் 2 சிறுமிகள் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் சகோதரிகள் என்றும் தெரியவந்தது. பின்னர் அவர்கள் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து உயிரிழந்த சிறுமிகளின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தங்கள் மகள்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிறுமிகளை பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்து கடத்தி சென்றதாகவும், அவர்களே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். அதோடு அவர்கள் பேரணியாக சென்றும் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து லக்கிம்பூர் கேரி காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதோடு குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
இதையடுத்து உயிரிழந்த சிறுமிகளின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தங்கள் மகள்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிறுமிகளை பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்து கடத்தி சென்றதாகவும், அவர்களே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். அதோடு அவர்கள் பேரணியாக சென்றும் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து லக்கிம்பூர் கேரி காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதோடு குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், "பட்டியலின மாணவிகள் கொலை வழக்கில் சுஹேல், ஜூனைது, ஹபிசுல் ரெஹ்மான், ஹரிமுதீன், மற்றும் ஆரிப் ஆகிய 5 பேரை கைது செய்துள்ளோம். இவர்களின் நண்பர் சக நண்பரான சொட்டு என்பவர் சிறுமிகள் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் குடியிருந்து வருகிறார். அவர் சிறுமிகளை இவர்களுக்கு தெரிய படுத்தியிருக்கிறார். அந்த வகையில் சம்பவத்தன்று சிறுமிகளை அந்த பகுதியிலுள்ள கரும்பு தோட்டம் ஒன்றிற்கு அழைத்து சென்று சென்றுள்ளனர். அங்கே வைத்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்" என்றார்.
மேலும் பெண் காவல் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், "இரு சிறுமிகள் தங்களது துப்பட்டாவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. அவர்களின் உடலில் எந்த வித காயங்களும் இல்லை. இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பெற்றோர் கொடுக்கும் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படும்" என்றார்.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த சிறுமிகளின் பக்கத்து வீட்டு இளைஞர் காவல்துறையினரை கண்டதும் தப்பியோடியபோது அவரது காலில் சுட்டு பிடித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் மேற்கொண்ட விசாரணையில் சிறுமிகளை யாரும் கடத்தவில்லை என்றும், அவர்கள் இருவரும் தாமாக பைக்கில் சென்றதும் தெரியவந்துள்ளது.
அதாவது, இரண்டு சிறுமிகளும் சுஹைல், ஜுனைத்திற்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள். சிறுமிகள் தாங்களாகத்தான் இருவருடனும் பைக்கில் சென்றுள்ளனர். அவர்களை கரும்பு காட்டிற்குள் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த பிறகு அந்த இளைஞர்கள் தங்களை திருமணம் செய்து கொள்ளும்படி சிறுமிகளிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவிக்கவே நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து துப்பட்டாவால் கொலை செய்து, மரத்தில் தொங்க விட்டுள்ளது தெரியவந்தது.
இந்த சம்பவம் தற்போது இந்தியாவில் பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் அம்மாநில ஆளும் பா.ஜ.க அரசுக்கும், யோகி ஆதித்யநாத்துக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக கடந்த ஆண்டு இதே லக்கிம்பூர் கேரி பகுதியில் விவசாய சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா கார் ஏற்றி விவசாயிகளை கொன்றுள்ள சம்பவம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!