India
“ஏற்றுமதிக்கு 20% வரி - 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அரசி விலை உயர்வு” : மோடி ஆட்சியின் அடுத்த அவலம்!
இந்தியர்களின் முக்கிய உணவு தானியமான அரிசிக்கு அண்மையில் ஒன்றிய பா.ஜ.க அரசு 5 சதவிகித ஜி.எஸ்.டி. விதித்தது. இதனால், நாடு முழுவதும் அரிசி விலை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் உயர்ந்தது.
தமிழ்நாட்டில் சென்னையில் 26 கிலோ எடையுள்ள 1 மூட்டை பொன்னி அரிசி முன்பு 900 ரூபாய்க்கு விற்கப்பட்டது, தற்போது 1200 ரூபாயாக உயர்ந்துள்ளது. 1 மூட்டைக்கு ரூ.300 உயர்ந்துள்ளது. பொன்னி பச்சை அரிசி விலை முன்பு 1050 ரூபாய்க்கு விற்பனை செய் யப்பட்டது. தற்போது 1250 ரூபாயாக உயர்ந்துள்ளது. பாசுமதி அரிசியின் விலையும் 2200 ரூபாயிலிருந்து 2500 ரூபாயாக உயர்ந்தது.
இது ஒருபுறமிக்க, ஒன்றிய அரசின் வேளாண்துறை வெளியிட்ட புள்ளி விவரம், நடப்பாண்டில் இந்தியாவில் நெல் சாகுபடி பரப்பளவு 6 சதவிகிதம் குறைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது
உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட அரிசி அதிகம் விளையும் மாநிலங்களில் மழை குறைந்ததால் அரிசி விளைச்சல் குறைந்துள்ளதாக தெரிவித்தது. நாடு முழுவதும் தற்போது 367.55 லட்சம் ஹெக்டேர் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறியது.
தடையும் விலக்கும் இதனால் 202223 ஆம் ஆண்டில் அரிசி உற்பத்தி கணிசமான பாதிப்பைச் சந் திக்கும் என்பதுடன், பற்றாக்குறை அபாயத்திற்கு நாட்டை இட்டுச்செல்லும், ஏற்கெனவே அரிசி விலை உயர்ந்துள்ள நிலையில், இந்த பற்றாக்குறை விலைவாசியை மேலும் கடுமையாக அதிகரிக்கும் என்ற எச்சரிக்கைகள் எழுந்தன.
இந்தப் பின்னணியிலேயே நெல் மற்றும் அரிசி ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு திடீரென 20 சதவிகித வரி விதித்துள்ளது. எனினும், செப். 9 முதல் 15 வரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய சுங்கத்துறை அனுமதியுடன் துறை முகத்தில் தயாராக இருக்கும் சரக்குகளுக்கு தகுந்த ஆவணங்களின் அடிப்படையில் விலக்கு அளிக்க முன் வந்துள்ளது. புழுங்கல் அரிசி மற்றும் பாசுமதி அரிசிக்கு ஏற்றுமதி வரியிலிருந்து விலக்கு அளிக் கப்பட்டுள்ளது.
உலக அளவில் அரிசி ஏற்றுமதியில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. உலக ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 40 சத விகிதமாக உள்ளது. 2021 இல் 150 நாடுகளுக்கு 2.15 கோடி டன் அரிசியை இந்தியா அரிசியை ஏற்றுமதி செய்தது. தற்போது 20 சதவிகித வரி விதிப்பால், வரும் மாதங்களில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 25 சதவிகிதம் அளவில் குறையும் என்று அரிசி ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய வரி விதிப்பால் இறக்குமதியாளர்கள் இந்தியாவுக்குப் பதிலாக தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான், மியான்மர் ஆகிய நாடுகளிலிருந்து அதிக அளவில் அரிசியை இறக்குமதி செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவிகித வரியுடன், உடைந்த அரிசி (குருணை) ஏற்றுமதிக்கு முழுமையாகவே தடை விதித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பு வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கோதுமை தானியம், கோதுமை மாவு (ஆட்டா ) ஏற்றுமதி மற்றும் மைதா, ரவை (ரவா/சிர்கி), முழுக்கால் ஆட்டா மற்றும் அதன் விளைவாக வரும் ஆட்டா போன்ற பிற பொருட்கள் ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு கட்டுப்பாடுகளை விதித்திருப்பது குறிப் பிடத்தக்கது.
Also Read
-
“மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிடுக!” : பிறந்தநாளை முன்னிட்டு துணை முதலமைச்சர் அறிக்கை!
-
நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு! : அதானி விவகாரம் குறித்து விவாதிக்க மறுப்பு!
-
மருத்துவப் படிப்புகளுக்கான 135 காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு! : இன்று முதல் தொடக்கம்!
-
“அகப்பட்டுக் கொண்டார் அதானி - பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?” : மோடியை வெளுத்து வாங்கிய முரசொலி!
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!