India
பெற்ற மகளையே எரித்து கொன்ற தந்தை.. உ.பி-யில் தொடரும் அதிர்ச்சி.. காரணம் என்ன ?
உத்தர பிரதேச மாநிலம் ஷாமிலி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் பிரமோத்குமார் (வயது 56). இவருக்கு 18 வயதில் மகள் ஒன்று உள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவரும் அந்த பகுதியில் இருக்கும் அஜய் காஷ்யப் என்ற மாற்று சமுதாயத்தை சேர்ந்த இளைஞரும் காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் காதல் விவகாரம் நாளடைவில் குடும்பத்தினருக்கு தெரிய வர, அவர்கள் இவரை கண்டித்துள்ளனர். மேலும் அவர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இனி அவருடன் பேசவோ பழகவோ கூடாது என்றும் கண்டித்துள்ளனர். இருப்பினும் ரகசியமாக தனது காதலை சந்தித்து வந்துள்ளார், அந்த இளம்பெண்.
இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் தந்தை அவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலத்தில் வேலை இருபதாம் கூறி கூட்டி சென்றுள்ளனர். அங்கே அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. அதில் கோபமடைந்த பெண்ணின் தந்தை அவரை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.
மேலும் அவரது உடல் மேல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த அவர், மகளை பானிபட்டிலுள்ள உறவினர் வீட்டிற்கு அன்பி வைத்துள்ளதாக தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வயல் பகுதியில் சடலம் ஒன்று இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அது அந்த பகுதியிலுள்ள பிரமோத்குமார் மகள் சடலம் என்று தெரியவந்தது.
பின்னர் அவர் குடும்பத்தாரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்து வந்தனர். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் பெண்ணின் தந்தையிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?