India
நீரில் மூழ்கி உயிரிழந்த மகன்.. உயிர்ப்பிக்க பெற்றோர் செய்த விசித்திர செயல்.. அதிர்ந்து போன அதிகாரிகள் !
கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ். 10 வயது சிறுவனான இவர் அந்த பகுதியில் இருக்கும் குட்டையில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இதன்பின்னர் கிராம மக்கள் அந்த சிறுவனின் சடலத்தை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைந்தனர். மகன் இறந்த சோகத்தில் இருந்த பெற்றோர் சடலத்தை உப்பு குவியத்தில் வைத்தால் சிறுவன் உயிரோடு வருவான் என்று நம்பியுள்ளனர்.
இதனால் உப்பு குவியலை சேர்ந்து அதில் தனது மகனின் சடலத்தை கிடத்தியுள்ளனர். சுமார் நூறு கிலோவுக்கு மேல் உப்பை எடுத்து தில் மகனின் சடலத்தை முழுவதுமாக மூடி, தலை மட்டும் வெளியே தெரியும்படி வைத்துள்ளனர்.
சுமார் எட்டு மணி நேரம்சிறுவனின் சடலம் அந்த உப்பு குவியலில் இருந்த நிலையிலும் சிறுவன் உயிர்த்தெழவில்லை. இந்த நிலையில், இது தொடர்பான தகவல் அறிந்த போலிஸார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன் பின்னர் பெற்றோர்களும் சிறுவன் உயிரெழுவான் என்ற நம்பிக்கையை இழந்த நிலையில், சிறுவனின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!