India
CHINA LOAN APP வழக்கு : Paytm, Cashfree, Razorpay-ல் அதிரடி ரெய்டு.. 17 கோடி பறிமுதல் செய்த அமலாக்கத்துறை
இந்தியாவில் இருக்கும் பல எலக்ட்ரானிக் பொருட்கள் சீன நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும் இந்திய மக்கள் அதிகமாக உபயோகிக்கும் ரியல்மி, ஓபோ, விவோ போன்ற மொபைல் போன்கள் சீன நிறுவனத்தால் தான் தயார் செய்யபடுகிறது.
இந்த நிலையில், ஒரு கும்பல் லோன் ஆப் மூலம் பண மோசடி செய்வதாக அண்மையில் புகார்கள் குவிந்த வண்ணமாக காணப்பட்டது. அதன்படி விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் அது ஒரு சீன ஆப் என்று கண்டறிந்தனர். சீனாவை சேர்ந்த சிலர் செல்போன் செயலி மூலமாக உடனடியாக கடன் வழங்கி, கடன் பெற்றவர்களிடம் இருந்து சட்டவிரோத முறையில் கூடுதல் பணம் வசூலித்து வந்தனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரளிக்கப்ட்டது.
இதையடுத்து சீனர்களால் செல்போன் மூலம் நடத்தப்படும் கடன் ஆப்கள் தொடர்பான வழக்கில், ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செயலிகளான ரேசர்பே, பேடிஎம் மற்றும் கேஷ் ப்ரீ நிறுவனங்களில் அமலாக்கத்துறை நேற்று அதிரடியாக சோதனை நடத்தியது.
இந்த சோதனை குறித்து அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மொபைல்போன் மூலம் சிறியளவில் கடன் பெற்ற பொதுமக்களை மிரட்டி பணம் பறித்தல், துன்புறுத்துவதில் சீன செல்போன் ஆப்கள் ஈடுபட்டது தொடர்பாக, பல்வேறு நிறுவனங்கள் மீது 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ரேசர்பே, பேடிஎம், கேஷ் ப்ரீ போன்ற பணப் பரிவர்த்தனை ஆப்கள், இந்தியர்களின் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, அவர்களை போலி இயக்குநர்களாக சேர்த்து குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் சீன நபர்களால் இயக்கப்படுகின்றன.
இந்த நிறுவனங்கள் தங்கள் சட்ட விரோத வணிகத்தை பல்வேறு வணிகர் ஐடிகள், பேமெண்ட் கேட்வே, வங்கிகளில் வைத்திருக்கும் கணக்குகள் மூலம் செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் போலி முகவரியில் செயல்பட்டு வந்துள்ளன.
ரேசர்பே, பேடிஎம், கேஷ் ப்ரீ போன்ற நிறுவனங்களுக்கு சொந்தமான பெங்களூருவில் உள்ள 6 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி உள்ளது. இதில், வணிகர் ஐடிகள் மற்றும் சீன நபர்களின் வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.17 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!