India
கணவனின் தம்பியுடன் காதல்.. புகார் தெரிவித்த கணவர்.. ஆத்திரத்தில் மனைவி செய்த கொடுமை !
உத்திர பிரதேச மாநிலம் பீகார்பூர் பகுதியை சேர்ந்தவர் ராஜோல் (வயது 27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த காயத்ரி என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. ஆரம்பத்தில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், ராஜோல் தம்பி தீரஜ் என்பவருக்கு காயத்ரி மேல் காதல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இவர்கள் இருவரும் கணவருக்கு தெரியாமல் தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இவர்கள் இரகசிய காதல் உறவு கணவரின் குடும்பத்தாருக்கு தெரிய வர, அவர்கள் இவர்கள் இருவரையும் கண்டித்துள்ளனர். இதையடுத்து இவர்கள் இருவரும் சந்திக்க முடியாமல் தவித்து வந்ததால், கணவர் ராஜோலுக்கு பாலில் விஷம் கலந்து கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.
ஆனால் பாலில் எதோ கெட்ட வாடை அடிப்பதை அறிந்த அவர் பாலை குடிக்கவில்லை. இதையடுத்து மனைவி மற்றும் தம்பி மேல் கிராம பஞ்சாயத்தில் புகார் தெரிவித்தார். பின்னர் அவர்கள் விசாரித்து பேச்சுவார்த்தை நடத்தி காயத்ரியை மன்னித்து விட்டனர்.
இருப்பினும் ஆத்திரம் அடங்காத தம்பியும், மனைவியும் ராஜோலை கொல்ல திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி சம்பவத்தன்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் இருவரும் சேர்ந்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே மூச்சு திணறி ராஜோல் உயிரிழந்ததையடுத்து அவரது தம்பி தீரஜ் தலைமறைவாகிவிட்டார்.
பின்னர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் அவரது சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்குக் அனுப்பி வைத்தனர். இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் மனைவி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தத்ததையடுத்து அவரை கைது செய்து விசாரித்தனர். அப்போது தனது உண்மையை ஒப்புக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த தம்பி தீராஜையும், மனைவி காயத்ரியையும் கைது செய்து அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"இரட்டை நாக்கு படைத்தவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை" - அமைச்சர் சேகர் பாபு விமர்சனம் !
-
“7 மலைக்குன்றுகள், 200 இயற்கை நீர்ச்சுனைகள் அழிந்து போகும்!” : ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம்!
-
கூட்டாட்சி தத்துவத்தை உறுதிசெய்யும் இந்திய அரசியலமைப்பு : முரசொலி தலையங்கம்!
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!