India
தாயை கொலை செய்ய Google-ல் ஐடியா தேடிய மகள்.. குற்றவாளியின் வாக்குமூலம் கேட்டு போலிஸ் ஷாக்!
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி ருக்மணி. இந்த தம்பதிக்கு இரண்டு மகள் உள்ளனர். இதில் மூத்த மகள் இந்துலேகாவுக்கு திருமணம் ஆகி அவரது கணவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இதனால் இந்துலேகா தனது பெற்றோருடனே வசித்து வருகிறார்.
இந்நிலையில் ருக்குமணிக்கு திடீரென மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அப்போது அவரை பரிசோதித்தபோது உடலில் விஷம் கலந்திருப்பது தெரியவந்ததுள்ளது.
இதையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மகள் இந்துலேகா முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் அவர் மீது போலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
பின்னர் போலிஸார் அவரிடம் தீவிரமாக விசாரணை செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்துலேகாவுக்கு ரூ.8 லட்சம் வரை கடன் இருந்துள்ளது. இதனால் வீட்டை தனது பெயருக்கு எழுதிக் கொடுக்கும் படி தாயாரிடம் இந்துலேகா வலியுறுத்தி வந்துள்ளார்.
ஆனால் அவரது தாய் நான் இறந்து பிறகுதான் சொத்து பிரிக்கப்படும் என கூறியுள்ளார். இதனால் இந்துலேகா தாயைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். இதற்காக யாருக்கும் சந்தேகம் வராதபடி எப்படி கொலை செய்வது என்பது குறித்து google-ல் ஐடியா தேடியுள்ளார்.
பின்னர் டீ-யில் விஷம் கலந்து தாயக்கு கொடுத்துள்ளார். மேலும் அவரது உணவிலும் மாத்திரைகள் கலந்து கொடுத்துள்ளார். இதைச் சாப்பிட்ட அவருக்குக் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில்தான் மருத்துவரின் பரிசோதனையில்தான் அவரது உடலில் விஷம் கலந்தது தெரியவரவே இந்துலேகா போலிஸாரிடம் சிக்கியுள்ளார். இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!
-
”தமிழ்நாடும் தமிழினமும் ‘கலைஞர் 1000’கூட கொண்டாடும்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!