India
செப்.1 முதல் கட்டணம் அதிகரிப்பு…Tollgate-ஐ மூட அரசு முடிவு :அடுத்தடுத்த செய்திகளால் குழம்பம்-உண்மை என்ன?
தற்போது இந்தியா முழுக்க நெடுசாலைகளில் சுங்க சாவடிகள் அமைத்து ஒன்றிய அரசு வசூல் செய்து வருகிறது. தனியார் மூலம் வசூல் செய்யப்படும் இந்த சுங்க சாவடிகள் ஒப்பந்த காலம் முடிந்தும் வசூலில் ஈடுபட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ந்தேதியும், செப்டம்பர் 1-ந்தேதியும் கட்டணம் உயர்த்தப்படும். கடந்த ஏப்ரல் 1-ந்தேதி தமிழகத்தில் உள்ள 22 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இதையடுத்து மீதமுள்ள 28 சுங்கச்சாவடிகளில் வருகிற செப்டம்பர் 1-ந்தேதி சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வெளியான தகவலின்படி, சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக நம்பர் பிளேட்களைப் படிக்கும் கேமராக்களைப் பொருத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதை அமைச்சர் ஒருவரின் பேட்டியும் உறுதிப்படுத்தியுள்ளது.
தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்த ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றி, தானியங்கி எண் பிளேட் ரீடர் (ANPR) கேமராக்களை நம்பியிருப்பதாக கூறியுள்ளார்.
விரைவில் தானியங்கி எண் பிளேட்டை அனைத்து வண்டிகளிலும் பொறுத்தவிருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் வண்டியில் செல்லும்போது நேரடியாக கணக்கில் இருந்து கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என்றும், இந்த முறை வெற்றிபெற்றால் நாட்டில் சுங்க சாவடிகள் அனைத்தும் மூடப்படும் என்றும் கூறப்படுகிறது.
இத்திட்டத்தின் முன்னோடி முயற்சி நடைபெற்று வருவதாகவும், சுங்கக் கட்டணம் செலுத்தாத உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில், இந்த மாற்றத்தை எளிதாக்கும் வகையில் சட்டத் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!