India
ஜார்க்கண்ட் முதல்வரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை.. பா.ஜ.க புகாரைத் தொடர்ந்து நடவடிக்கை!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்த ஹேமந்த் சோரன் உள்ளார்.
இங்கு கடந்த 2021-ம் ஆண்டு ஜூனில் ஜார்க்கண்ட் சுரங்க துறை சார்பில் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சுரங்க ஒதுக்கீட்டை முதல்வர் பெற்றிருப்பதாக பாஜக குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக அந்த கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-க்கு எதிராக முதல்வர் ஹேமந்த் சோரன் செயல்பட்டிருப்பதாக தலைமை தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்தது. இதனை விசாரித்த தேர்தல் ஆணையம் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்கும் பரிந்துரையை ஜார்க்கண்ட் மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது
இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார் அவரின் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படும் என்பதோடு அவர் முதல்வர் பதவியையும் இழப்பார். இந்த நிலையில் , தேர்தல் ஆணையம் அனுப்பிய பரிந்துரை அப்படியே பாஜகவினர் எழுதியதைப் போலவே இருக்கிறது என ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ஆளுநர் இன்னமும் எனக்கு அந்த பரிந்துரையை அனுப்பவும் இல்லை. அது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் ஆளுநரின் முடிவு என்ன அவர் எந்த மாதிரியான முடிவினை எடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளார். ஒருவேளை ஹேமந்த் சோரன் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் அவர் மனைவி அந்த பதவியினை ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!