India
அதிகாலையில் நடந்த கோர விபத்து.. 2 குழந்தை உட்பட 9 பேர் உடல் நசுங்கி பலி: 14 பேர் கவலைக்கிடம்!
கர்நாடக மாநிலம், பாழேன ஹள்ளி என்ற கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் லாரி ஒன்று ஜீப் மீது மோதியுள்ளது. இதில் ஜீப் வாகனத்தில் பயணம் செய்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். மேலும் காயம் அடைந்த 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 24 பேர் பெங்களூருவிற்கு ஜீப்பில் பயணம் செய்துள்ளனர். இவர்களது வாகனம் பாழேன ஹள்ளி அருகே வந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. உயிரிழந்த 9 பேரில் 3 பெண்கள், 2 குழந்தைகள் அடங்குவர்.
மேலும், காயமடைந்த 14 பேரும் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நான்கு பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரியவருகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
அதேபோல் குரூசர் வாகனத்திலிருந்தவர்கள் அனைவரும் பெங்களூருவில் கூலி வேலை செய்து வருபவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !