India

ஆசையாய் selfie எடுக்க சென்ற இளைஞர்.. முதலை செய்த செயலால் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் !

மத்திய பிரதேச மாநிலம் மாண்டசோர் என்ற பகுதி ஒரு சுற்றுலாத்தலமாகும். இங்கு சுற்றுலா பயணிகள் வந்து வேடிக்கை பார்ப்பதுடன் அங்கே இருக்கும் நதியை ரசித்தும் செல்வர். இதற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அங்கே வருகை தருவர். மேலும் இதன் அருகில் அணை இருப்பதால் அங்கே அநேகமான மக்கள் வருகை தருவர்.

அந்த வகையில் நேற்று அந்த பகுதியில் இருக்கும் நதியையும், அருகே இருக்கும் காந்தி சாகர் அணையை காண பயணிகள் பலர் வருகை தந்தனர். அப்போது அங்கே வந்த இளைஞர் ஒருவர், காந்தி சாகர் அணையிலுள்ள சம்பல் நதியை வேடிக்கை பார்த்ததோடு, தடுப்புச் சுவர் மீது ஏறினார். இதையடுத்து தனது மொபைல் போனை எடுத்து Selfie எடுக்க முயன்ற போது கால் இடறி அந்த நதியில் விழுந்தார்.

இதனைக்கண்ட பொதுமக்கள் அவரை மீட்பதற்காக நதியின் அருகில் போகையில், அவரும் கரைக்கு தப்பித்து வந்து கொண்டிருந்தார். ஆனால் அதற்குள் அந்த நதியில் இருந்த முதலை ஒன்று அந்த இளைஞரின் காலை கவ்வி இழுத்து தண்ணீருக்குள் சென்றது. மேலும் அவரை கடித்து குதறி சாப்பிட்டது.

இந்த கோர சம்பவத்தை கண்ட அங்கிருந்த மக்கள், அலறியடித்து ஓடினர். மேலும் இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் அந்த இளைஞரின் உடலை கஷ்டப்பட்டு மீட்டனர். மேலும் அந்த இளைஞர் குறித்து விசாரித்த போது யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை. இதையடுத்து அவரை குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Selfie எடுக்க சென்றவர் கால் இடறி விழுந்ததில் முதலை கடித்து கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "எனது பிறப்பிலேயே திமுக உள்ளது.." - திமுகவில் இணைந்த தேமுதிக மாவட்ட செயலாளர் பனப்பட்டி தினகரன் பெருமிதம்!