India
NDTV-யின் 29.18 % பங்குகளை வாங்கிய அதானி.. கார்பரேட் கைகளுக்கு செல்கிறதா மிகப்பெரும் செய்தி நிறுவனம் ?
இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனங்களில் ஒன்றாக NDTV இருந்து வருகிறது. இந்த செய்தி நிறுவனத்தை பிரபல தொழிலதிபரான அதானி வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான அறிவிப்பும் வெளிவந்துள்ளது.
அதானி குழுமம் இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி " NDTVயின் 29.18 சதவீத பங்குகளை மறைமுகமாக வாங்கும் என்றும் மேலும் 26 சதவீத பங்குகளை வாங்க வாய்ப்பை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.
NDTVயின் 29.18 சதவீத பங்குகள் விளம்பரதாரர்களான ராதிகா ராய் மற்றும் பிரணாய் ராய் ஆகியோரால் உருவாக்கப்பட்ட RRPR நிறுவனத்துக்கு சொந்தமானதாக இருந்தது. அதை தற்போது அதானி குழுமம் வாங்கியுள்ளது.
கடந்த செப்டம்பர் 2021 இல், அதானி குழுமம் NDTV-யை கையகப்படுத்தியதாக அறிக்கைகள் வெளிவந்த பிறகு அதை RRPR நிறுவனத்தின் உரிமையாளர்களான ராதிகா ராய் மற்றும் பிரணாய் ராய் மறுத்திருந்தனர். இந்த நிலையில் தற்போதுஅதானி குழுமம் RRPR நிறுவன பங்குகளை வாங்கியதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதானி குழுமத்தின் இந்த நடவடிக்கையின் மூலம் அதானி இந்தியாவின் பெரிய செய்தி நிறுவனத்தில் ஒன்றான NDTVயின் 25% க்கும் அதிகமான வாக்குரிமையைப் பெறுகிறார். இதன் மூலம் அந்த நிறுவனத்தின் பல்வேறு கட்டுப்பாடுகள் அதானி வசம் செல்லவுள்ளது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்