India
"உல்லாச பயணம், பரிசு பொருட்கள்.."-டோலோ-650 மாத்திரையை பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு ரூ.1000 கோடி லஞ்சம்!
பொதுவாக உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனைக்கு சென்றால், அங்கே மருத்துவர்கள் முதலில் பரிந்துரைப்பது 'பாராசிட்டமால்' மாத்திரையை தான். இந்த மாத்திரையை 'டோலோ' நிறுவனமும் தயாரித்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகமாக காணப்பட்ட சமயத்தில் பொதுமக்களுக்கு மருத்துவர்கள் பாராசிட்டமால் 'டோலோ-650' மாத்திரையை பரிந்துரைத்தனர். இதனால் மக்களும் அந்த மாத்திரையை உபயோகப்படுத்தினர்.
கடந்த 2019 முதல் 2021 டிசம்பர் வரை மட்டும் டோலோ-650 நிறுவனமானது சுமார் 350 கோடி ரூபாய்க்கு அவர்கள் தயாரித்த மாதிரிகளை விற்பனை செய்துள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், இந்திய மருத்துவ மற்றும் விற்பனை பிரதிநிதிகள் கூட்டமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் "தங்கள் நிறுவனம் தயாரிக்கும் மருந்துகளை அதிக அளவில் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை என்ற பெயரில் விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள், வெளிநாட்டு பயணங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் செலவிடுதல், போன்ற குற்றச் செயல்களுக்கு அந்த மருந்து தயாரிக்கும் நிறுவனங்களைப் பொறுப்பாக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் "இதனை மத்திய வரிகள் வாரியத்தின் தரப்பு தெரிவித்த ஆதாரத்தின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது" என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தற்போது இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் "இது பெரிய பிரச்னையாகும். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டிருந்த தனக்கும் இந்த மாத்திரைகளே பரிந்துரைக்கப்பட்டது. எனவே இதனை முறையாக விசாரித்து ஒன்றிய அரசு 1 வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் செப்டம்பர் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம், பெங்களூர் ரேஸ் கோர்ஸ் சாலையில் டோலோ - 650 தயாரிப்பு நிறுவனமான மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் அலுவலகத்தில் வருமான வரித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சோதனை நடத்தியது.
குறிப்பாக டெல்லி, சிக்கிம், பஞ்சாப், தமிழ்நாடு மற்றும் கோவா உட்பட நாடு முழுவதும் 200 அதிகாரிகள் ஒரே நேரத்தில் 40 இடங்களில் சோதனை நடத்தியதாக ஐடி துறை வட்டாரங்கள் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!