India
‘முஸ்லிம் என்பதை காரணம் காட்டி வீடு கொடுக்க மறுக்கிறார்கள்’ : ஆதாரத்தோடு கண்ணீர் மல்க பேசிய கர்நாடக பெண்!
கர்நாடக மாநிலம், பெங்களூரு பகுதியல் வசித்துவருபவர் ஹைஃபா. இவர் கர்நாடகவில் வேறொரு பகுதியில் வீடு தேடி வருகிறார். இந்த நிலையில், இது தொடர்பாக வீட்டு தரகர் பலரிடமும் பேசி வந்துள்ளார்.
அதன்படி இவர், வீட்டு தரகர் ஒருவரிடம் வாடகை வீடு குறித்து வாட்சப் மூலம் விசாரித்துள்ளார். அப்போது அந்த தரகர் இவரிடம் "உங்கள் பெயர் என்ன?" என்று கேட்க, இவரோ "ஹைஃபா" என்று பதிலித்துள்ளார். அதற்கு அவரோ "நீங்கள் இந்துவா?" மறுகேள்வி கேட்க, இவரோ "இல்லை... அதில் ஏதேனும் பிரச்னையா?" என்று பதில் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு தரகர், "ஆம்.. வீடு காலியாக இருக்கிறது. ஆனால் அதன் உரிமையாளர் இந்துக் குடும்பத்தை எதிர்பார்க்கிறார்" என்று பதில் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து மற்றோரு தராகரிடமும் வீடு குறித்து வாட்சப் மூலம் விசாரித்துள்ளார். அப்போது அவரும் கூட இவரது பெயரை கேட்டுள்ளார். இவர் "ஹைஃபா" என்று கூறியவுடன், "முஸ்லீமா" என்று பதில் கேள்வி கேட்டுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அந்த பெண், "அனைவரும் 75-வது ஆண்டு சுதந்திர விழாவை கொண்டாடி முடித்துவிட்ட நிலையில், நான் ஆகஸ்ட் 15-ஐ நான் எப்படிக் கழித்தேன் என்பது இங்கே." என்று குறிப்பிட்டிருந்தார். இவரது இந்த பதிவு தற்போது வைரலாகி வருவதுடன் சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது.
ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் சிறுபான்மையினரான முஸ்லீம்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வரும் நிலையில், ஒரு இஸ்லாமிய பெண்ணின் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இதே மாநிலத்தில் தான் ஹிஜாப் விவகாரம் வெடித்து உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்