India
இனி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் டிக்கெட் கட்டாயமா.. ? அதிர்ச்சி தகவலுக்கு ரயில்வேயின் பதில் என்ன ?
இந்திய ரயில்வேயில் ரயில்களில் பயணிக்க 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்கவேண்டிய தேவை இல்லை. அவர்களை குழந்தையை தனது இருக்கையிலோ, அல்லது மடியிலோ வைத்து கொள்ளலாம்.
ஆனால் அதேநேரம் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தனி இருக்கை வேண்டும் என்றால் முழு கட்டணமும் செலுத்தி தனி இருக்கை பெறவேண்டும். அப்படி செய்தால் மட்டுமே குழந்தைகளுக்கு தனி இருக்கை வழங்கப்படும். இந்த உத்தரவு 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரயில்வே அமைச்சகம் தெளிவான சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், சமீபத்தில் ரயில்வே தனது விதிமுறைகளை மாற்றி, 1 முதல் 4 வயதினரும் டிக்கெட் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது பயணிகள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது தவறான செய்தி என தற்போது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் : "ரயிலில் குழந்தைகளுக்கான பயண சீட்டு விதிமுறைகளை இந்திய ரயில்வே மாற்றியமைத்துள்ளதாக அண்மையில் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதன்படி 1 முதல் 4 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்க வேண்டும் என்று அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், அந்த தகவல்கள் முற்றிலும் தவறானவை. ரயிலில் குழந்தைகளுக்கான பயண சீட்டு விதிமுறைகளில் இந்திய ரயில்வே எந்த மாற்றமும் செய்யவில்லை.
இந்திய ரயில்வேயில் ரயில்களில் பயணிக்க 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்கவேண்டிய தேவை இல்லை. அதேபோல 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தனி இருக்கை வேண்டும் என்றால் முழு கட்டணமும் செலுத்தி தனி இருக்கை பெறலாம். எனவே, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கட்டணம் வாங்க வேண்டிய தேவையில்லை என்ற நடைமுறையே தற்போது தொடர்கிறது." என்று விளக்கம் அளித்துள்ளது.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!