India
கர்நாடக பாஜகவில் அரசுக்கு எதிராக எழும் கலகக்குரல்..சொந்த கட்சி அமைச்சர் பேச்சால் அதிர்ச்சியில் அமித்ஷா!
கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். கடந்த சில மாதங்களாகவே கர்நாடகாவில் மதமோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இஸ்லாமியர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருகின்றனர்.
மேலும் அம்மாநில அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதை பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களே இந்த புகார்களை எழுப்பி வருகின்றனர். அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் பா.ஜ.க அமைச்சர் மாதுசுவாமி அண்மையில் சமூக ஆர்வலர் பாஸ்கர் என்பவரிடம் பேசிக் கொண்டிருந்த ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியானது.
அதில், ”கர்நாடகாவில் நாங்கள் ஆட்சி செய்யவில்லை. வெறும் மேலாண்மை செய்து கொண்டிருக்கிறோம். கர்நாடகாவில் நடப்பது அரசு அல்ல. வெறும் மேலாண்மை மட்டுமே. இன்னும் எட்டு மாதங்கள் என நாங்கள் காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறோம்" என்று கூறினார்.
இந்த ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அமைச்சர் மாதுசுவாமி பதவி விலக வேண்டும் என பா.ஜ.கவினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மற்றொரு சர்ச்சை கர்நாடக பா.ஜ.க-வில் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகா மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அதில், "காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா மீண்டும் கர்நாடகா முதலமைச்சராக வேண்டும் என்று விரும்புகிறேன். நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்கள். இந்த கருத்தை வெளிப்படையாக தெரிவிப்பதற்கு எனக்கு எந்த பயமும் இல்லை. ஏனென்றால் நான் யாருக்கும் அடிமை கிடையாது." என்று கூறினார். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் பேசிய அமித்ஷா தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவில் ஆட்சியை கைப்பற்றும் ஆப்பரேசன் சவுத் இந்தியா திட்டத்தை அறிவித்தார். ஆனால், தென்மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்யும் ஒரேமாநிலத்தில் கூட ஆட்சி கையை விட்டு போகும் நிலையில் இருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Also Read
-
சென்னை MTC பேருந்துகளில் கட்டணமின்றி 20 கிலோ எடை வரை செல்லலாம்- எதற்கெல்லாம் கட்டணம்? முழு விவரம் உள்ளே !
-
”கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பு கூட்டுறவுத்துறை” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த வீரர், அதனாலதான் அவரால் இதனை செய்ய முடிகிறது - நாதன் லயான் புகழாரம் !
-
”சமஸ்கிருதம் படியுங்கள்” : பா.ஜ.கவுக்கு பிரச்சாரம் செய்த பேராசிரியர் - நடவடிக்கை எடுத்த பல்கலைக்கழகம்!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் செய்தித்தொடர்பாளர் படுகொலை : இஸ்ரேல் அறிவிப்பு !