India

மோடி பழைய வாக்குறுதியே நிறைவேற்றல, இதில் புதிதாக என்ன வாக்குறுதி கொடுப்பாரோ? சுப்பிரமணியன் சாமி கிண்டல்!

கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 1 அன்று ஒன்றிய அரசு ‘அனைவருக்கும் வீடு 2022’ என்னும் திட்டத்தை அறிவித்தது. அதைத் தொடர்ந்து 2017ம் ஆண்டின் சுதந்திர விழாவில் பேசிய பேசிய பிரதமர் நரேந்திர மோடி 2022-ம் ஆண்டு இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது இந்தியாவில் உள்ள அனைவரும் சொந்த வீட்டில் இருப்பார்கள் என்று கூறியிருந்தார்.

மேலும், 2022-ம் ஆண்டுக்குள் 2 கோடி வேலை வாய்ப்பு, விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்குவது, புல்லட் ரயில் போன்ற வாக்குறுதிகளையும் வழங்கியிருந்தார். இந்த நிலையில், தற்போது இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ள நிலையில், மோடியின் இந்த வாக்குறுதியை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

ஏனெனில் தற்போதும் இந்தியாவில் கோடிக்கணக்கானோர் வீடு இல்லாமல் இருக்கின்றனர். அதேபோல வேலை இல்லாதோர் எண்ணிக்கை இந்திய வரலாற்றில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது .புல்லட் ரயில் ஏற்பாடுகள் தொடக்க கட்டத்தில் கூட இல்லை என மோடியின் வாக்குறுதிகளில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை.

மோடியின் இந்த வாக்குறுதியை காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் போன்ற எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், தற்போது பா.ஜ.க.வை சேர்ந்த மூத்த தலைவரே மோடியை விமர்சித்துள்ளார்.

மோடியின் வாக்குறுதி குறித்து பேசியுள்ள பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி, "2022-ம் ஆண்டு, ஆகஸ்ட் 15-ம் நாளுக்குள் அனைவர்க்கும் வீடு, விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்குவது, புல்லட் ரயில் விடப்படும் போன்ற மோடியின் வாக்குறுதிகள் நிறைவேறிவிட்டதா? இந்தாண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் உரையில் பிரதமர் என்னென்ன வாக்குறுதிகள் அளிக்கப்போகிறார்?" என மோடியை கிண்டல் செய்துள்ளார்.

Also Read: 'மக்கள் தொகையை கட்டுப்படுத்த புது ஐடியா..' தம்பதிகளுக்கு ஒடிசா அரசு கொடுக்கும் Gift என்ன தெரியுமா?